Monday, April 20, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

ravi by ravi
27 October 2025
in செய்திகள்
0
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பதற்கு காரணம் நடிகர் விஜய் ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியது முதலே அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

களத்தை மாற்றிய கரூர்:

விஜய் தனது அரசியல் களத்தை முடிவெடுத்த நிலையில், கரூர் சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் அரசியல் களம் கடந்த ஒரு மாதமாக முடங்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் அவர் அரசியல் களத்தில் எந்தளவு தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்பதையே வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறது.

நேரில் செல்லாமல், நேரில் வரவழைத்த விஜய்:

அனுபவமின்மை, முறையான வழிகாட்டிகள் இல்லாதது போன்ற பல்வேறு தடுமாற்றங்களுடன் கடந்த ஒரு மாதமாக அவதியுற்று வரும் விஜய் தற்போது கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை இன்று சென்னைக்கே நேரில் வரவழைத்து சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக அரசியலில் இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான நிகழ்வாகவே இது பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு குடும்பத்தில் உயிரிழப்பு என்றால் பாதிக்கப்பட்டவர்களை அரசியல் தலைவர்கள்தான் நேரில் சென்று சந்திப்பது வழக்கம். அந்த தருணத்தில் செல்ல முடியாவிட்டாலும் சில நாட்கள் கழித்து செல்வது வழக்கம். ஆனால், வேறு எங்கும் இல்லாத புதுமையாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களை தன்னைப் பார்க்க விஜய் அழைத்து வந்துள்ள சம்பவம் பெரும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

விஜய்க்கே எதிர்வினையா?

இது விஜய்க்கு எதிர்வினையாற்றவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை தான் சந்திக்க நிச்சயம் நேரில் வருவேன் என்று ஏற்கனவே உறுதியளித்திருந்தார். மேலும், விஜய் வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறார் என்றும், அவர் பனையூர் பண்ணையார் என்றும் அவர் மீது பலத்த விமர்சனங்கள் அவர் அரசியல் களத்தில் நுழைந்தது முதலே இருந்து வருகிறது.

நெருக்கடி காலத்தில், தன்னைப் பார்க்க வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்காத ஒருவரை எப்படி மக்கள் தலைவனாக ஏற்க முடியும்? என்ற கேள்வி கடுமையாக சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. விஜய்க்கு காவல்துறை தற்போது வரை அனுமதி அளிக்காதது, விசாரணை முடியும் வரை விஜய் கரூர் செல்ல சிபிஐ தடை விதித்துள்ளது என்று தவெக தரப்பில் கூறப்பட்டாலும் அதை அதிகாரப்பூர்வமாக தவெக-வினர் மக்களுக்கு இதுவரை தெரிவிக்கவில்லை.

நம்பிக்கையை இழக்கிறாரா?

இதுபோன்று தவெக-வும், விஜய்யும் செயல்பட்டு வந்தால் அவருக்கு பலமாக உள்ள முதல் தலைமுறை வாக்குகள், ரசிகர்களின் வாக்குகளையும் அவர் இழக்க நேரிடும் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், விஜய்க்கு அரசியலின் அடிப்படை பண்பும் தெரியவில்லை என்றே பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி ராமதாஸ் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு இருந்தபோதும் கூட விஜய் தொலைபேசியில் விசாரிக்கவில்லை. திருமாவளவன் அவர் நலம் பெற வேண்டும் என்று கூறிய சூழலில், விஜய் விசாரிக்கத் தவறிவிட்டார். அரசியலுக்கு அப்பாற்பட்டு நலம் விசாரிப்பது தமிழக அரசியலில் பண்பாகும்.

Tags: karur stampedekarur stampede tvktvk stampede
Previous Post

RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

Next Post

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

ravi

ravi

Next Post
Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023