Tuesday, February 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Lok Sabha Election: பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி? அன்புமணி ராமதாஸ் வியூகம் என்ன?

ravi by ravi
11 March 2024
in செய்திகள்
0
Lok Sabha Election: பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி? அன்புமணி ராமதாஸ் வியூகம் என்ன?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி பங்கீடு, தொகுதிப் பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க. தனது கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், என பிரம்மாண்ட கூட்டணி அமைத்துள்ளது.

பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி:

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடன் பெரிய கட்சிகள் ஏதும் கூட்டணி அமைக்கவில்லை. தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தொகுதிப் பங்கீடு இறுதியானவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட தமிழகத்தில் பெரும் செல்வாக்குள்ள கட்சியாக கருதப்படும் பா.ம.க. இந்த முறை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் என்று கருதப்படுகிறது.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், அங்கு பா.ஜ.க. தலைவருடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு பெரும் எதிர்ப்புகள் நிலவி வரும் சூழலில், பா.ம.க. அவர்களுடன் கூட்டணி வைப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணியில்லை என்று கூறி வந்த பா.ம.க. கடந்த தேர்தலில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தபோதே கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. அதன்பின்பு, பா.ம.க.விற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது என்பதே குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைப்பது மீண்டும் பா.ம.க.விற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அன்புமணி ராமதாஸ் வியூகம் என்ன?

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பா.ம.க. கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் மீண்டும் பா.ஜ.க.வே ஆட்சி அமைக்க பெரும் வாய்ப்பு இருப்பதால், ராஜ்யசபா உறுப்பினர் பதவியை பெற்று அதன் மூலம் இணையமைச்சர் பதவியை பெற அன்புமணி ராமதாஸ் வியூகம் வகுத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்று ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைத்தாலும் அன்புமணி ராமதாசுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு ஆகும்.

Tags: Election 2024Lok Sabha ElectionLoksabha electionLoksabha election 2024
Previous Post

Ashwin: 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையைச் செய்த ஒரே வீரர் அஸ்வின் – அப்படி என்ன செய்தார்?

Next Post

Isha: ஈஷாவில் பல்லாயிரம் ஆண்டு பண்பாட்டை பறைசாற்றும்‘தமிழ் தெம்பு’ திருவிழா!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023