Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே தொடங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

ravi by ravi
1 November 2023
in செய்திகள்
0
அநீதி.. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் பிற்போக்குத்தனம் – கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

“தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பருவ நெல் அறுவடை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காவிரிப் படுகையின் பெரும்பாலான பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் காவிரி பாசன மாவட்டங்களில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய முடியாமல் உழவர்கள் தவித்து வருகின்றனர்.

நேரடி கொள்முதல் நிலையங்கள்:

காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிறுத்தப்படுவதற்கு எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லை. அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து விடும் என்பதால், அதற்குள்ளாக அறுவடையை முடித்து, நெல்லை விற்பனை செய்ய வேண்டும் என்று உழவர்கள் விரும்புகின்றனர். அவ்வாறு நடந்தால் தான் காவிரி பாசன மாவட்டங்களில் தீப ஒளி திருநாள் கொண்டாட்டமாக இருக்கும். ஆனால், உழவர்களின் எதிர்பார்ப்புகளை முறியடிக்கும் வகையில் நெல் கொள்முதலை நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

காவிரி பாசன மாவட்டங்களில் ஐந்தரை லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்களில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரின்றி வறட்சியால் வாடி விட்டன. ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் போதிய நீர் கிடைக்காததால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்திலிருந்தும் தப்பிப் பிழைத்த பயிர்கள் இப்போது அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், அவை மழையில் நனைந்து வீணாகும் ஆபத்து உள்ளது.

உடனே தொடங்க வேண்டும்:

காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பது அரசின் கவனத்திற்கு வந்திருக்கிறதா? என்பது தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதலை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் தீப ஒளித்திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags: anbumani ramadosscm mk stalintamilnadu
Previous Post

Sankashti Chaturthi: இன்று சங்கடஹர சதுர்த்தி! விநாயகர் வழிபாட்டில் இதெல்லாம் இருந்தா நல்லது!

Next Post

Leo Success Meet: ‘ஒரே சூப்பர்ஸ்டார், ஒரே தல’ – ரஜினி, அஜித் ரசிகர்களை குறி வைக்கும் விஜய்யின் மாஸ்டர் ப்ளான்

ravi

Leo Success Meet: 'ஒரே சூப்பர்ஸ்டார், ஒரே தல' - ரஜினி, அஜித் ரசிகர்களை குறி வைக்கும் விஜய்யின் மாஸ்டர் ப்ளான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023