இந்தியாவின் அரசியலமைப்பு சாசனத்தை எழுதியவர் அம்பேத்கர். மக்களவையில் அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
தமிமுன் அன்சாரி கண்டனம்:
அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மனிதநேய ஜனநாயக கட்சிப் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளதாவது,
“டாக்டர் அம்பேத்கர்
இந்தியாவின்
பெருந்தலைவர்களில் ஒருவர்.
அவரின்
கருத்தியலோடு
உடன் படலாம்.
முரண்படலாம்.
அது
அவரவர் விருப்பம்
ஆனால்
அவரை
சிறுமைப்படுத்துவதை
ஏற்க முடியாது
அவர்
நம் அரசியல் சாசன
சட்டத்தின் சிற்பி.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அமித்ஷாவிற்கு எதிராக இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்க்கட்சிகள் அமித்ஷாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.














