Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Will Jacks: வில் ஜேக்ஸ் எனும் வீரன்! ஆர்.சி.பி.யின் புது அவதார்!

ravi by ravi
29 April 2024
in செய்திகள்
0
Will Jacks: வில் ஜேக்ஸ் எனும் வீரன்! ஆர்.சி.பி.யின் புது அவதார்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அணிகளில் ஆர்.சி.பி. தவிர்க்க முடியாத அணியாகும். இந்த தொடரில் மிக மோசமான பந்துவீச்சு காரணமாக அவர்கள் முதல் பாதியில் தொடர் தோல்விகளை சந்தித்தனர். குறிப்பாக, சன்ரைசர்ஸ் அணி ஆர்.சி.பி.க்கு எதிராக 287 ரன்கள் குவித்தபோது, பெங்களூர் பந்துவீச்சு எந்தளவு மட்டமாக இருக்கிறது என்பதை அந்த போட்டி காட்டியது.

மீண்டு வரும் ஆர்.சி.பி.

அதேபோட்டியில், இலக்கை நோக்கி துரத்திய ஆர்.சி.பி. 262 ரன்கள் குவித்தபோது அவர்களது போராட்ட குணத்தை அனைவரும் பாராட்டினர். அதற்கு அடுத்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோற்ற ஆர்.சி.பி., சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகவே தனது வெற்றியைத் தொடங்கியது. அந்த போட்டியில் ஆர்.சி.பி, வெற்றி மட்டும் பெறவில்லை. இந்த தொடரில் மிகுந்த ஆதிக்கம் நிறைந்த அணியாக உலா வந்த சன்ரைசர்ஸின் பலவீனத்தை மற்ற அணிகளுக்கு படம்போட்டு காட்டியது.

சேசிங் மற்றும் சுழற்பந்துவீச்சில் அவர்கள் தடுமாறுவார்கள் என்பதை ஆர்.சி.பி. உணர்த்த, நேற்று சி.எஸ்.கே. சன்ரைசர்சை சுருட்டி வீசியது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் குஜராத் அணி நிர்ணயித்த 201 ரன்கள் இலக்கை ஆர்.சி.பி. அணி 16 ஓவர்களிலே எட்டிப்பிடித்தது. வில் ஜேக்ஸ் என்ற புதிய சகாப்தம் நேற்று ஆர்.சி.பி. அணிக்காக உதயமானது.
இந்த தொடரில் முதல் சில போட்டிகளில் அவர் களமிறக்கப்படாமல் பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டதற்கு, கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் அணியில் சேர்க்கப்பட்டார். முதல் ஓரிரு போட்டிகளில் அவரது அதிரடியை காண முடியாதவர்களுக்கு ஒரு அரைசதம் விளாசி எச்சரிக்கை செய்தார்.

வில் ஜேக்ஸ் எனும் வீரன்:

நேற்றைய போட்டியில் வில் ஜேக்ஸ் எனும் வீரன் என்பதை நிரூபித்துவிட்டார். ஏபி டிவிலியர்ஸின் அதிரடியை போல வில் ஜேக்ஸின் ஆட்டம் நேற்று இருந்தது. 25 பந்துகளில் 37 ரன்கள் இருந்த வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் 100 ரன்களுக்கு சென்றுவிட்டார். குறிப்பாக, உலகத் தரம் வாய்ந்த ரஷீத்கான் பந்திலே சிக்ஸராக விளாசி அனைவரையும் வாயைப் பிளக்க வைத்தார்.

அவரது அதிரடியை கண்ட ரசிகர்கள் பலரும் இவரை ஏன் தொடக்கம் முதலே பயன்படுத்தவில்லை? என்று ஆதங்கத்துடன் கேட்டு வருகின்றனர். கண்டா வரச் சொல்லுங்க என்று வில் ஜேக்ஸிற்கு மீம்ஸ்கள் போட்டது மிகச்சரியானதே என்பதையும் வில் ஜேக்ஸ் தனது அதிரடியால் நிரூபித்துள்ளார். நேற்றைய போட்டியில் மட்டும் வெறும் 5 பவுண்டரிகள் மட்டுமே அடித்த ஜேக்ஸ் 10 சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அடுத்தடுத்த போட்டிகளில் வில் ஜேக்ஸ் ஆர்.சி.பி.க்கு பக்கபலமாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

Tags: iplIPL 2024will Jacks
Previous Post

விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள்; காவேரி கூக்குரலின் மிளகு சாகுபடி கருத்தரங்கில் அமைச்சர் பேச்சு

Next Post

Rinku Singh: ரிசர்வ்ட் வீரர்கள் பட்டியலில் ரிங்கு சிங்! பி.சி.சி.ஐ. முடிவு சரியா?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023