இந்தியாவில் இந்திய அணி ஆடும் கிரிக்கெட் தொடர்களுக்கு இணையான வரவேற்பை பெற்ற ஒரு கிரிக்கெட் தொடர் ஐ.பி.எல். 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.
நாளை முதல் ஐ.பி.எல். டிக்கெட்டுகள்:
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. தோனி, கோலி என இரண்டு பெரிய ஜாம்பவான்கள் இந்த போட்டியில் ஆட இருப்பதால் இதைப்பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிவார்கள்.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்க உள்ளது. இந்த முறை முழுக்க, முழுக்க ஆன்லைனில் மட்டுமே இந்த டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது. டிக்கெட்டுகளின் விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை எவ்வளவு?
C, D, E Lower பிரிவு டிக்கெட் விலை தலா ரூபாய் 1700க்கு விற்கப்படுகிறது. I, J, K Upper பிரிவு டிக்கெட் ரூபாய் 4 ஆயிரத்திற்கும், I, J, K Lower பிரிவு ரூபாய் 4,500க்கும், C, D, E Upper பிரிவு டிக்கெட் ரூபாய் 4 ஆயிரத்திற்கும் விற்கப்படுகிறது. இதுதவிர KMC Terrace பிரிவு டிக்கெட் ரூபாய் 7 ஆயிரத்து 500க்கு விற்கப்படுகிறது. கடந்த முறையை காட்டிலும் இந்த முறை டிக்கெட்டுகள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்டுகளை சி.எஸ்.கே.வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் சென்று பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.














