Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Seeman: வேங்கைவயல் விவகாரம்; இதுதான் சமூக நீதியா? இதுதான் திராவிட மாடலா? கொதித்தெழுந்த சீமான்

ravi by ravi
27 January 2025
in செய்திகள்
0
Seeman: வேங்கைவயல் விவகாரம்; இதுதான் சமூக நீதியா? இதுதான் திராவிட மாடலா? கொதித்தெழுந்த சீமான்
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய வேங்கைவயல் கிராம விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பு மக்களையே குற்றவாளிகள் என்று தமிழக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

குடிநீரில் மனிதக்கழிவு:

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட  வன்கொடுமையில், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியினைச் சுமத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள திமுக அரசின் நிர்வாகச் செயல்பாடு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எந்த மக்கள் பாதிக்கப்பட்டார்களோ அதே மக்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் தமிழகக் காவல்துறையின் போக்கு ஏற்கவே முடியாத கொடும் அநீதியாகும். 

சாதி ஒழிப்பு, சமூக விடுதலை, விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என  வாய்கிழியப் பேசும் திமுக அரசின் சமூக நீதி இதுதானா? பாதிக்கப்பட்டோரையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதுதான் எல்லா மக்களுக்குமான திராவிட மாடல் ஆட்சியா?‌ பேரவலம்!  அநீதிக்குத் துணைபோகும் திமுக அரசின் இக்கொடுங்கோல் செயல்பாடுகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.

சகிக்க முடியாத பெருங்கொடுமை:

ஆதித்தமிழ் குடிமக்கள் வசிக்கும் பகுதியில் நடந்தேறிய சாதிய வன்மம் கொண்ட இக்குற்றச்செயலினை முற்றிலுமாக மடைமாற்றி, தனிநபர் நோக்கம் கொண்ட மோதல்போல சித்தரித்து, அப்பகுதியைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய தம்பிகள் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருப்பது சகித்துக் கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும்.

ஏற்கனவே, குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதில் உடல்நலக்கேடும், மன அழுத்தத் தாக்குதல்களுக்கும் ஆளான வேங்கைவயல் மக்களுக்கு மேலும் அநீதி இழைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பது வெட்கக்கேடானது. 

பாதிக்கப்பட்டவரே குற்றவாளியா?

முரளிராஜா எனும் ஊர்க்காவல் படையினைச் சேர்ந்த தம்பி, நீரின் தன்மை சீரழிந்தது குறித்து ஆராய்கையில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்டதனைக் கண்டறிந்து புகார் அளித்தவராவார். மனிதக்கழிவு கலந்த நீரினை உட்கொண்டுப் பாதிக்கப்பட்ட அவரையே இறுதியில் குற்றவாளியாக மாநிலப்புலனாய்வுத்துறை வழக்கில் சேர்த்திருப்பது விசாரணையின் அடிப்படையையே கேள்விக்குறியாக்குகிறது. 

மாநிலம் முழுவதும் பேசுபொருளாகி, மிகுந்த முதன்மைத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கக்கூடிய இவ்வழக்கிலேயே புகார் அளித்த மக்கள் மீது காவல்துறை குற்றம் சுமத்தி இருக்கிறதென்றால், இனி எந்த வன்கொடுமைக்கு புகார் அளிக்க உழைக்கும் மக்கள் முன்வருவார்கள்? 

இதுதான் சமூக நீதியா?

வேங்கைவயலில் நிலவும் சாதியச் சிக்கலினை மூடி மறைத்து, தனிநபர் பழிவாங்கல் போக்கலினால் இக்கொடுமை நடந்திருப்பதாக முடிவெழுதுவதுதான் பெரியார் வழியிலான ஆட்சியா பெருமக்களே? இதுதான் நீங்கள் கட்டிக் காக்கும் சமூக நீதியா? இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அம்மக்களுக்கான நீதி கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட முதல்வர் ஸ்டாலின் முன்வராததுதான் விளிம்பு நிலை மக்கள் மீதான திமுக அரசின் அக்கறையா?

சாதியத்தோடு இக்குற்றம் நடந்தேறி இருப்பது உறுதியாகத் தெரிய வந்திருக்கும் நிலையில், அதனைத் தனிநபர் விரோதத்தினால் விளைந்தது என திசைதிருப்ப முற்படுவது உண்மையானக் குற்றவாளிகளைத் தப்பவிடும் கொடுஞ்செயலாகும். இது குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவைக் கலந்ததற்கு நிகரான  வன்கொடுமையாகும்.

அதிகார முறைகேடா?

வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே, அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் அலைபேசி உரையாடல்களும், புகைப்படங்களும் வெளியே கசிய விட்டிருப்பது வெளிப்படையான மோசடித்தனமாகும். பாதிக்கப்பட்ட மக்களைக் குற்றப்படுத்த இந்த இழிவான செயலில் ஈடுபடுகிறதா காவல்துறையும், அதிகார வர்க்கமும்? எனும் ஐயம் எழுகிறது. வெளியே விடப்பட்ட ஒலிநாடாவை வைத்து வழக்கின் கோணத்தையே மாற்றி முடிவெழுத முற்படுவது மிக மோசமான அதிகார முறைகேடாகும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வரும் நிலையில், ஒடுக்கப்பட்ட ஆதிக்குடி மக்கள் மீதான வன்முறைகளும், வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.  இதனைத் தடுத்து, அடித்தட்டு மக்களைக் காக்க முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழி சுமத்துவது வரும் காலங்களில் குற்றச்செயல்கள் அதிகரிக்கவே வழிவகை செய்யும் என்பது உறுதியாகும்.

மறுவிசாரணை:

ஆகவே,  முதல்வர் ஸ்டாலின் இவ்வழக்கில் சிறப்புக் கவனமெடுத்து, பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை இவ்வழக்கிலிருந்து விடுவிப்பதோடு, மறுவிசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags: DMKmk stalinseemanstalinvengaivayal
Previous Post

Isha: இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை கலாச்சாரமே உலகத்திற்கான எதிர்காலம் – சத்குரு

Next Post

வக்பு சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் செயல்பாடு ஜனநாயக விரோதமானது – நெல்லை முபாரக் ஆவேசம்

ravi

ravi

Next Post
வக்பு சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் செயல்பாடு ஜனநாயக விரோதமானது – நெல்லை முபாரக் ஆவேசம்

வக்பு சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் செயல்பாடு ஜனநாயக விரோதமானது - நெல்லை முபாரக் ஆவேசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023