Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Isha: சத்குருவின் குடும்பத் திருவிழா’; சத்குருவிற்கு மக்கள் நன்றி விழா

ravi by ravi
3 January 2025
in செய்திகள்
0
Isha: சத்குருவின் குடும்பத் திருவிழா’; சத்குருவிற்கு மக்கள் நன்றி விழா
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தொண்டாமுத்தூர் வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் இணைந்து ‘சத்குருவின் குடும்பத் திருவிழா’ என்னும் விழாவை வரும் 5-ம் தேதி நடத்த உள்ளனர்.

கோவை மாவட்டம் மத்துவராயப்புரத்தில் நடைபெறும் இவ்விழாவில் தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. வேலுமணி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். இது தொடர்பாக இவ்விழா ஒருங்கிணைப்பாளர் குமார் கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈஷா அறக்கட்டளை:

உலகம் அறிந்த யோகியும், ஞானியுமான சத்குரு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தொண்டாமுத்தூர் வட்டார மக்களின் நலனுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

அவருடைய ஈஷா அறக்கட்டளையின் மூலம் எங்களுடைய கிராம மக்களின் கல்வி, ஆரோக்கியம், வேலைவாய்ப்பு, விவசாயம், பொருளாதாரம் உள்ளிட்டவை நன்கு மேம்பட்டுள்ளது. தொண்டாமுத்தூர் வட்டாரப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈஷாவைச் சார்ந்தே உள்ளது.

அந்த வகையில், சத்குருவை நாங்கள் எங்களுடைய குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறோம். கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் கூட எங்களுடைய நூற்றுக்கணக்கான குடும்பங்களை பேணி காத்தது ஈஷா மையம் தான். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் உடல் மற்றும் மன நலனிற்காக ஈஷாவை தேடி வருகின்றனர்.

சத்குருவிற்கு நன்றி:

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு சேவையாற்றும் ஈஷா நம்முடைய தொண்டாமுத்தூர் பகுதியில் அமைந்து இருப்பது கிராம மக்களாகிய எங்களுக்கு பெருமையாக உள்ளது.

உள்ளூர் மக்கள் முதல் உலக மக்கள் வரை அனைவருக்கும் சேர்த்து அனுதினமும் தொண்டாற்றி வரும் சத்குருவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டியது எங்களுடைய கடமையாகும். அதற்காக, ‘சத்குருவின் குடும்பத் திருவிழா’ என்னும் ஒரு நிகழ்வை வரும் ஜனவரி 5-ம் தேதி கோவை மத்துவராயப்புரத்தில் உள்ள சக்திவேல் அண்ணா தோட்டத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். இதில் தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்களின் கீழ் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மாலை 5 மணியளவில் ஈஷா பிரம்மாச்சாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும், அதை தொடர்ந்து பேரூர் ஆதீனம் அவர்களின் அருளுரையும் நடைபெற உள்ளது.

மேலும், இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. வேலுமணி, வானதி சீனிவாசன், காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் செல்லமுத்து, நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், திமுக மாவட்ட செயலாளருமான ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

முன்னதாக, பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தொண்டாமுத்தூர் பகுதி மக்கள் மட்டுமின்றி அனைத்து ஊர் மக்களும் கலந்து கொள்ளலாம். விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் குமார் அவர்களுடன் விழா குழுவினர் இருட்டுப்பள்ளம் கிட்டுசாமி, செம்மேடு வேலுமணி, முள்ளாங்காடு சசிகலா மற்றும் கோட்டைகாடு குழந்தைவேலு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: coimabatoreishasadhguru
Previous Post

Gambhir: கதம்! கதம்! கம்பீருக்கு கல்தாவா? இந்தியாவுக்கு புது பயிற்சியாளரா?

Next Post

பெண்ணுரிமைக்கு எதிரான தி.மு.க. ஆட்சி; பெண்களே அகற்றுவார்கள் – ஏ.என்.எஸ்.பிரசாத் திட்டவட்டம்

ravi

ravi

Next Post
பெண்ணுரிமைக்கு எதிரான தி.மு.க. ஆட்சி; பெண்களே அகற்றுவார்கள் – ஏ.என்.எஸ்.பிரசாத் திட்டவட்டம்

பெண்ணுரிமைக்கு எதிரான தி.மு.க. ஆட்சி; பெண்களே அகற்றுவார்கள் - ஏ.என்.எஸ்.பிரசாத் திட்டவட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023