கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது,
மக்கள் எதிர்பார்ப்பு:
“அ.தி.மு.க. 52 வது ஆண்டு துவக்க விழா தமிழ்நாடு முழுவதும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் தரவில்லை. அனைத்து தரப்பு மக்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள் எப்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். சட்டமன்ற கூட்டத் தொடரில் எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி மக்களுக்கான பிரச்சினைகளை எடுத்து வைத்தார். அவருக்கு சரியான முறையில் வாய்ப்பு தரவில்லை. மத்தியில் காங்கிரஸ், பாஜக என எந்த கட்சியாக இருந்தாலும், காவிரி நதிநீர் பிரச்சனையில் எதுவும் செய்யவில்லை
மக்கள் நலன்தான் முக்கியம்
எடப்பாடி பழனிசாமி பேசியதை மறைத்து விட்டார்கள் கூட்டணி முக்கியமல்ல. தமிழ்நாடு மக்கள் நலன் தான் முக்கியம். தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் எதுவும் செய்யவில்லை. எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும். இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.”
இவ்வாறு அவர் பேசினார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் கூட்டணியை முறித்துக் கொண்ட அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறு, சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க.வுடன் பல்வேறு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.













