Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

‘கத்துக்குட்டி அல்ல, கற்றுக்கொடுக்கும் அணிகள்’ ஆப்கான், நெதர்லாந்து வெற்றி சொல்வது என்ன? – ஓர் அலசல்

ravi by ravi
18 October 2023
in செய்திகள், விளையாட்டு
0
‘கத்துக்குட்டி அல்ல, கற்றுக்கொடுக்கும் அணிகள்’ ஆப்கான், நெதர்லாந்து வெற்றி சொல்வது என்ன? – ஓர் அலசல்
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பைத் தொடர் நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத உலகக்கோப்பையாக உருவெடுத்து வருகிறது. அதற்கு காரணம் இத்தனை ஆண்டுகளாக குட்டி அணிகள் என்று ஓரங்கட்டப்பட்டு, குறைவாக எண்ணப்பட்டு வந்த கிரிக்கெட் அணிகள் ஜாம்பவான் அணிகளை புரட்டி எடுத்து வருகின்றன.

தொடரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும்:

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் வெறும் 10 அணிகள் மட்டுமே பங்கேற்று ஆடி வருகின்றன. அதில் தரவரிசையில் உள்ள முதல் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், இலங்கை – நெதர்லாந்து அணிகள் தகுதிச்சுற்று மூலம் உலகக் கோப்பைத் தொடருக்குள் நுழைந்தன.

இந்த தொடரில் சிறிய அணிகளாக அதாவது இவர்களெல்லாம் கோப்பையை வெல்ல வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட அணிகளாக வங்கதேசம், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பில் முன்னணியில் இருக்கிறது. ரசிகர்களும் அவ்வாறே நினைத்து வருகிறோம். இவர்கள் எல்லாம் கோப்பையை வெல்ல வாய்ப்பு இல்லாவிட்டாலும், சாம்பியன் அணிகளுக்கு அதிர்ச்சி தர தகுதியான அணிகள் என்பதையே அனைவரும் மறந்துவிட்டோம் என்பதை கடந்த சில ஆட்டங்கள் காட்டுகிறது.

பாடம் எடுத்த நெதர்லாந்து:

டெல்லியில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வாரி, சுருட்டி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு படைத்தது. ஆப்கானிஸ்தான் தந்த அதிர்ச்சியே முன்னாள் சாம்பியன்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த உலகக்கோப்பையில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசுரபலம் கொண்ட அணியாக உள்ளே வந்த தென்னாப்பிரிக்காவை நேற்று நெதர்லாந்து அணி சிதைத்தது என்றே சொல்லலாம்.

82 ரன்னுக்கு 5 விக்கெட் என்று தடுமாறிக் கொண்டிருந்த நெதர்லாந்து அணியை அந்த அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் மிகவும் பொறுப்புடன் ஆடி 78 ரன்கள் விளாசி 245 ரன்களை எட்ட வைத்தார். 50 ஓவர்களில் 400 ரன்களை விளாசும் தென்னாப்பிரிக்கா அணி 43 ஓவர்களில் 246 ரன்களை எட்டிவிடும் என்று எண்ணிய ரசிகர்களுக்கு நெதர்லாந்து பாடம் எடுத்தது என்றே சொல்லாம்.

கற்றுக் கொடுக்கும் அணிகள்:

பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் மிகவும் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் விதத்தில் 207 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை ஆல் அவுட்டாக்கி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர். இந்த வெற்றி நெதர்லாந்து அணியை ஒரு ஆபத்தான அணி என்பதை மற்ற அணிகளுக்கு உணர்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளின் வெற்றி அவர்கள் கத்துக்குட்டி அணிகள் அல்ல, கற்றுக்கொடுக்கும் அணிகள் என்பதை சாம்பியன் என்ற ஆணவத்துடன் உலா வரும் அணிகளின் ஆழ்மனதில் பதிய வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

லேசா எடை போடலாமா?

இந்த தொடரில் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் அணி வங்கதேச அணியாகும். வங்கதேச அணி அடுத்ததாக இந்தியாவுடன் விளையாட உள்ளது. 2007 உலகக்கோப்பையில் இந்தியாவை ஏற்கனவே வீழ்த்திய அனுபவம் வங்கதேசத்திற்கு உண்டு. அந்த தோல்விக்கு பின்பே இந்திய அணி மறுகட்டமைப்பு செய்யப்பட்டது என்று கூட சொல்லலாம்.

ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளின் வெற்றி இந்திய அணி வங்கதேசம் அணியை லேசாக எடை போட்டுவிடக்கூடாது என்பதையே காட்டுகிறது. மேலும், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, அயர்லாந்து, நேபாளம், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே போன்ற வளர்ந்து வரும் அணிகளுடன் பெரிய அணிகள் அடிக்கடி கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர்களது கிரிக்கெட் வளர உத்வேகம் தர வேண்டும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: cricketodi world cupODIWC2023
Previous Post

எடப்பாடி பழனிசாமி எப்போது முதலமைச்சராக வருவார் என மக்கள் எதிர்பார்ப்பு – எஸ்.பி.வேலுமணி பேச்சு

Next Post

ஈஷா நவராத்திர விழா: நாடாளுமன்றத்தில் பாடிய உமா நந்தினி இசை நிகழ்ச்சி அரங்கேற்றம்

ravi

ravi

Next Post
ஈஷா நவராத்திர விழா: நாடாளுமன்றத்தில் பாடிய உமா நந்தினி இசை நிகழ்ச்சி அரங்கேற்றம்

ஈஷா நவராத்திர விழா: நாடாளுமன்றத்தில் பாடிய உமா நந்தினி இசை நிகழ்ச்சி அரங்கேற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023