Tuesday, June 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Maha Shivratri: ஈஷாவில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்! 22 மொழிகளில் நேரலை! எப்படி பார்ப்பது?

ravi by ravi
26 February 2025
in செய்திகள்
0
Maha Shivratri: ஈஷாவில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்! 22 மொழிகளில் நேரலை! எப்படி பார்ப்பது?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கோவை ஈஷா யோகா மையத்தில் 31-ஆவது மஹாசிவராத்திரி விழா நாளை இன்று மிக விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

மகா சிவராத்திரி:

இவ்விழாவில் ஆளுநர்கள், அமைச்சர்கள், தொழில் முனைவோர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பல்துறை ஆளுமைகளுடன் விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள், பழங்குடியின கிராம மக்கள், பொது மக்கள் என எளிய மக்களும் ஒன்றாக கலந்து கொள்ள உள்ளனர்.

அமித்ஷா, துணை முதலமைச்சர், அமைச்சர்கள்

அந்த வகையில் ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் ஒடிசா மாநில ஆளுநர் ஹரிபாபு கம்பஹம்பதி, பஞ்சாப் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மத்திய சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், மகாராஷ்டிரா மண் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சஞ்சய் ரதோட் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பண்ணாரி குழுமத் தலைவர் பாலசுப்ரமணியனம், சோழமண்டல குழுமத் தலைவர் வேலையன் சுப்பையா, அப்பல்லோ குழுமத்தை சேர்ந்த சங்கீதா ரெட்டி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர்களும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர்.

திரை பிரபலங்கள்:

திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் சந்தானம், தமன்னா, விஜய் வர்மா, திரைப்பட இயக்குனர் ஓம் பிரகாஷ் மெஹ்ரா உள்ளிட்டவர்களும், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா அவர்களும் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

ஈஷாவின் வழிக்காட்டுதலில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மொத்தம் 24 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகளும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள்:

அதே போன்று ஈஷாவை சுற்றியுள்ள பழங்குடியின மக்கள் மற்றும் தொண்டாமுத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர்.

இதனுடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களும் நேரில் வந்து விழாவில் பங்கேற்க உள்ளனர். அனைவருக்கும் தேவையான இருக்கை வசதிகள் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கலை நிகழ்ச்சிகள்:

இவ்விழாவில் பங்கேற்கும் மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, ‘பாரடாக்ஸ்’ என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் – அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் இந்திய மொழிகளில் ஆன்மீகப் பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பிரபலமான ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.

எப்படி பார்ப்பது?

கோவை ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா தமிழ், மலையாளம், ஓடியா, அசாமி, பெங்காலி உள்ளிட்ட 11 இந்திய மொழிகள் மற்றும் அரபிக், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட 11 அயல் மொழிகள் என மொத்தம் 22 மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 250-க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் நேரலை செய்யப்பட உள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டார், ZEE5 ஆகிய OTT தளங்கள் மற்றும் BIG 92.7, ஃபீவர் ஆகிய பண்பலை வானொலிகளிலும்(FM) நேரலை செய்யப்பட உள்ளது. 100-க்கும் அதிகமான PVR-INOX திரையரங்குகளில் நேரலை செய்யப்பட உள்ளது.

Tags: ishamaha shivratri 2025shivratri 2025
Previous Post

Isha: ஈஷாவில் ‘யக்‌ஷா’ திருவிழா: இந்துஸ்தானி இசையால் பரவசப்படுத்திய ராகுல் தேஷ்பாண்டே

Next Post

Isha:கோலாகலமாக நடந்த ஈஷா மகாசிவராத்திரி! பக்தியின் கும்பமேளா – புகழாரம் சூட்டிய அமித்ஷா

ravi

ravi

Next Post
Isha:கோலாகலமாக நடந்த ஈஷா மகாசிவராத்திரி! பக்தியின் கும்பமேளா – புகழாரம் சூட்டிய அமித்ஷா

Isha:கோலாகலமாக நடந்த ஈஷா மகாசிவராத்திரி! பக்தியின் கும்பமேளா - புகழாரம் சூட்டிய அமித்ஷா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023