Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home சினிமா

தமிழில் முதல் சினிமாட்டிக் யுனிவர்சை எடுத்தவர் பாரதிராஜாவா? என்ன சொல்றீங்க?

ravi by ravi
20 January 2024
in சினிமா, செய்திகள்
0
தமிழில் முதல் சினிமாட்டிக் யுனிவர்சை எடுத்தவர் பாரதிராஜாவா? என்ன சொல்றீங்க?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான ஒன்று யுனிவர்ஸ் வரிசை படங்கள். அதாவது, ஒவ்வொரு படங்களின் கதாபாத்திரங்களையும் அடுத்தடுத்த படங்களின் கதாபாத்திரங்களுடன் தொடர்புபடுத்தி படங்களை வரிசையாக எடுப்பதே யுனிவர்ஸ் படங்கள் ஆகும். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ். அவெஞ்சர்ஸ் படம் உலகெங்கும் மாபெரும் வெற்றி பெற்றதற்கு இதுவே காரணம் ஆகும்.

சினிமாட்டிக் யுனிவர்ஸ்:

தமிழில் அப்படி ஒரு சினிமாட்டிக் யுனிவர்சை உருவாக்கி தனி சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படத்தின் இறுதியில் இவர் கைதி படத்தை இணைத்து ரோலக்ஸ் கதாபாத்திரத்தை கொண்டு வந்து தன்னுடைய யுனிவர்சை தொடங்கினார். அதன் தொடர்ச்சியே லியோ படமாக அமைந்தது.

லோகேஷ் கனகராஜ் போலவே இந்தியிலும் இயக்குனர் யஷ்ராஜ் ஷாருக்கான், சல்மான்கான், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோரை வைத்து யஷ்ராஜ் ஸ்பை யுனிவர்சை உருவாக்கியுள்ளார். தமிழில் முதன்முதலில் யுனிவர்ஸ் படங்களை எடுத்தவர் லோகேஷ் கனகராஜ் என்றே நாம் நினைத்திருப்போம். ஆனால், தமிழில் முதன்முதலில் யுனிவர்ஸ் படங்களை எடுத்தவர் பாரதிராஜா என்றால் நம்புவீர்களா?

பாரதிராஜா யுனிவர்ஸ்:

ஆம். தமிழிலில் முதன்முதலில் பாரதிராஜா இயக்கிய படம் 16 வயதினிலே.இந்த படம் தமிழ் சினிமாவையே திருப்பிப்போட்ட படம் என்று கூறலாம். கிராமங்கள் நோக்கி தமிழ் சினிமாவை நகர வைத்ததற்கு இந்த படமே தொடக்கப்புள்ளி என்று கூறலாம். அந்த படத்தின் இறுதிக்காட்சியில் சப்பாணிக்காக( கமல்) கதாநாயகி மயிலு ( ஸ்ரீதேவி) காத்திருப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சப்பாணி மீண்டும் வந்தாரா? மயிலு அவருடன் சேர்ந்து வாழ்க்கையை தொடங்கினாரா? என்ற முடிவை நம் கையிலே பாரதிராஜா விட்டிருப்பார்.

அதற்கான பதில் இன்றளவும் நமக்கு தெரியாமலே இருந்திருக்கும். ஆனால், அதற்கான பதிலை அடுத்தாண்டே தன்னுடைய அடுத்த படத்தில் வழங்கியிருப்பார் பாரதிராஜா. அடுத்தாண்டு 1978ம் ஆண்டு பாரதிராஜா தன்னுடைய 2வது படமான கிழக்கே போகும் ரயிலை இயக்கினார். அந்த படத்தில் நாயகன் சுதாகர் சைக்கிள் ஓட்டிச் செல்லும்போது ஒரு காட்சி படத்தில் இடம்பெற்றிருக்கும்.

அந்த காட்சியில் ஒரு வீட்டின் விசேஷ நிகழ்ச்சியில் மொய் செய்தவர்களின் பெயர்கள் மைக்கில் வாசிக்கப்படும். அதில், பெட்டிக்கடை மயிலு புருஷன் சப்பாணி ரூபாய் 5 அப்படி என்று கூறுவார்கள். அந்த ஒற்றை வசனத்தில், சிறைக்குச் சென்ற சப்பாணி மீண்டும் வந்துவிட்டான், அவனை மயிலு திருமணம் செய்துவிட்டாள், அவர்கள் இருவரும் திருமணம் செய்த பிறகு பெட்டிக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்கள் என்பதை நமக்கு கூறியிருப்பார். பாரதிராஜாவின் 16 வயதினிலே போலவே கிழக்கே போகும் ரயிலே படமும் ப்ளாக்பஸ்டர் படமாகும். தமிழ் சினிமாவின் முதல் யுனிவர்ஸ் படத்தை எடுத்த பெருமை பாரதிராஜாவிற்கே சேரும்.

Tags: 16 VayathinileBharathirajaCinematicKilakke Pogum Railekollywoodkollywood news
Previous Post

Thaipusam 2024 Date: பக்தர்களே முருகனுக்கு உகந்த தைப்பூசம் எப்போது? முழு விவரம் உள்ளே

Next Post

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா! பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023