சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், நடிக்காமல் இருந்தாலும் சற்றும் கூட புகழ் குறையாமல் இருப்பவர்களும், அரசியலில் அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் செல்வாக்குடன் இருக்கும் தலைவர்களும் ஒரு சிலரே ஆவார்கள். இந்த இரண்டுமாக இருப்பவர் நடிகரும்.. தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மட்டுமே ஆவார்.
கண்கலங்க வைக்கும் விஜயகாந்த் நிலை:
ஒரு காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை காட்டிலும் அதிகளவு வசூலை குவித்த நாயகன், தமிழ்நாடு அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதாவையே திணறடித்தவர். தி.மு.க.வையே பின்னுக்குத் தள்ளி ஜெயலலிதாவிற்கு எதிராக எதிர்க்கட்சி நாற்காலியில் அமர்ந்தவர். இப்படி மங்கா புகழை கொண்ட மாமனிதர் விஜயகாந்த் என்றே சொல்லலாம். ஆனால், சமீபகாலமாக அவரது உடல்நிலை பற்றிய செய்தியும், அவரது புகைப்படங்களும் வெளியாகி அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் மிகுந்த சோகத்திற்கு ஆளாக்கி வருகிறது.
மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய விஜயகாந்த், சென்னை திருவேற்காட்டில் நடந்த தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.
முழுவதும் உடல் மெலிந்து, என்ன நடக்கிறது என்பதே தெரியாத மனிதர் போ, ஒரு காட்சி பொருள் போல விஜயகாந்த் அந்த மேடையில் அமர்ந்திருந்தது அதைப்பார்த்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்தது என்றே சொல்லலாம். சினிமாவில் எத்தனை ஆக்ஷன் காட்சிகள், எத்தனை ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்ட மனிதன், இன்றைய தமிழ் சினிமாவில் அவரால் வாழ்க்கை பெற்றவர்கள் எத்தனை பேர், அவர் செய்யாத தர்மங்களா? என்று உண்மையில் நம்ம வீட்டு பிள்ளையாக வாழ்ந்த விஜயகாந்த் இப்படி இருந்ததை கண்டு பல தொண்டர்கள் கதறி அழுதனர் என்றே சொல்லலாம்.
ஏன் கஷ்டப்படுத்துறீங்க?
அவரை ஏன் இவ்வாறு அழைத்துக் கொண்டு வந்து சிரமப்படுத்துகிறீர்கள்? அவர் இல்லாமலே பொதுச்செயலாளர் பதவியை பிரேமலதாவிற்கு வழங்கியிருக்கலாமே? என்றுதான் தொண்டர்களை ஆவேசப்படுத்துகிறது. அவர் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்காவிட்டாலும் ஒரு முதலமைச்சருக்கு இருப்பதை காட்டிலும் அவருக்கான தொண்டர்கள் படையும், அவர் மீதான அன்பும், மரியாதையும் ரசிகர்களுக்கு அதிகளவில் இருக்கிறது.
அவர் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பும் அதே நிலையில், அவரை இனிமேல் இதுபோன்று சிரமப்படுத்த வேண்டும் என்று பிரேமலதாவையும் விமர்சித்து வருகின்றனர்.













