உலகெங்கும் பிரபலமாகும் நிகழ்ச்சிகளில் மாஸ்டர்செஃப் நிகழ்ச்சியும் ஒன்றாகும். வேறு வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்படி உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனரோ? அதேபோல வேறு வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் மாஸ்டர்செஃப் நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் உள்ளனர்.
மாஸ்டர்செஃப் பிரபலம்:
ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பபான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் பிரபலமான சமையற்கலை நிபுணர் சாரா டூட். இவர் சென்னையில் இரண்டு மணி நேர சமையல் வகுப்பு எடுத்தார். இந்தியா வந்த சாரா டூட் சென்னைக்கு வந்திருந்தார். சென்னையில் உள்ள பிரபல தனியார் வணிக வளாகமான பீனிக்ஸ் மாலில் சாரா டூட் நடத்திய இந்த வகுப்பு நடைபெற்றது.
சமையற் கலை நிபுணர், மாடல், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட சாரா டூட் நடத்திய இந்த வகுப்பை 200க்கும் மேற்பட்ட பெண்கள் நேரில் பங்கேற்று கண்டுகளித்தனர். இந்த சமையல் வகுப்பு குறித்து சாரா டூட் கூறும்போது, என்னுடைய இந்த வகுப்பில் ஏராளமானோர் பங்கேற்றது எனக்கு மிகவும் மன மகிழ்ச்சியை தந்தது. நான் இந்தியா மற்றும் ப்ரெஞ்ச் உணவுகளை சமைத்தேன். எனக்கு இந்தியாவோட நெருக்கமான தொடர்பு உள்ளது. அதுதான் எனது சமையலிலும் பிரதிபலித்தது.
பரிசுகள்
சாரா டூட் இந்த நிகழ்ச்சியில் ஆகஸ்ட் முடிவதற்குள் யார் 25 ஆயிரத்திற்கும் அதிகமாக பொருட்களை இங்கு வாங்குகிறார்களோ அவர்களுக்கு மிகப்பெரிய பரிசு உண்டு என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது, கவாஸ்கி நிஞ்சா 600 புதிய இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இது மட்டுமின்றி டிவி, ஏசி, ஃப்ரீட்ஜ், செல்போன் போன்ற பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.













