எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வக்பு சட்டத்திருத்த மசோதா:
வக்பு சட்டத் திருத்த மசோதா தொடர்பான, பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு, எதிர்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் நிராகரித்து, ஆளுங்கட்சி உறுப்பினர்களின் 14 திருத்தங்களுடன் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கைகளை விரும்பாத ஒன்றிய பாஜக ஆட்சியில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் செயல்பாடுகளிலும் ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது. வக்ஃபு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டபோதே, இது ஒரு கண்துடைப்பான நடவடிக்கை என எஸ்டிபிஐ கட்சி குற்றம்சாட்டியது. இந்த மசோதாவை முழுவதுமாக ரத்து செய்வது மட்டும் தான் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளை பாதுகாக்க முடியும் என வலியுறுத்தியது.
ஜனநாயக விரோதம்:
வக்ஃபு சட்டத் திருத்த மசோதா தொடர்பாக, மின்னஞ்சல் மற்றும் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டங்கள் மூலமாக பெறப்பட்ட, சுமார் 572 திருத்தங்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஏற்கனவே முன் முடிவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திட்டத்தின்படி, குழுவின் ஆலோசனைக் கூட்டத்திலிருந்து எதிர் கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு, ஜனநாயக விரோதமாக குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது.
ஆகவே, முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் செயல்பட்ட, பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் நடவடிக்கைக்கு எதிராக, எதிர்கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றத்தை நாடி, அரசியலமைப்பு விரோத வக்ஃபு திருத்த மசோதாவை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.