Saturday, April 11, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை! சாலைகளில் தேங்கும் மழைநீர்! சென்னைவாசிகள் கடும் அவதி

ravi by ravi
30 November 2023
in செய்திகள்
0
தொடர்ந்து பெய்யும் மழை! சாலைகளில் தேங்கும் மழைநீர்! சென்னைவாசிகள் கடும் அவதி
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் ஓரிரு தினங்களாக மழை விட்டு, விட்டு பெய்து வந்த நிலையில் நேற்று மாலை முதல் தீவிரமாக பெய்து வருகிறது.

விடுமுறை:

நேற்று மாலை முதல் இரவு வரை மட்டும் சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. கடுமையான மழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொளத்தூர், மீனம்பாக்கம், புழல், நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மாலை மட்டும் 10 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்தது. மழை காரணமாக மாநகராட்சி பணியாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னையில் சாலைகளில் தேங்கும் மழைநீர் உடனடியாக அகற்றுவதற்கும் ஏற்பாடுகள் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ந்து பெய்யும் மழை:

வங்கக்கடலில் புதிய புயல் உருவாக உள்ளதால் வரும் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது பெய்யும் மழையை காட்டிலும் தீவிரமாக அந்த தேதிகளில் பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, போக்குவரத்து காவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மழை பரவலாக பெய்து வருவதால் ஆங்காங்கே கண்காணிப்பு பணியையும், மழைநீர் சாலைகளில் தேங்காத வகையிலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில் வடிந்தாலும், சில இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் தேங்கிய இடங்களில் தண்ணீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: chennaiChennai Floodchennai rainChennai RainsHeavy Rain
Previous Post

மீண்டும் இணையும் கோப்ரா கூட்டணி? விக்ரமை இயக்குகிறாரா அஜய் ஞானமுத்து?

Next Post

18 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் படங்கள்! இந்த முறை வெற்றி யாருக்கு?

ravi

18 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் படங்கள்! இந்த முறை வெற்றி யாருக்கு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023