Saturday, April 11, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

மோடியின் தொடரும் இஸ்லாமிய வெறுப்பு! கடும் கண்டனத்தை தெரிவித்த வைகோ!

ravi by ravi
24 April 2024
in செய்திகள்
0
மோடியின் தொடரும் இஸ்லாமிய வெறுப்பு! கடும் கண்டனத்தை தெரிவித்த வைகோ!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியதற்கு கடும் கண்டனம் குவிந்து வருகிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மதக்கலவரம்:

நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 18-ஆவது மக்களவைத் தேர்தலில் ஏப்ரல் 19 அன்று 102 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முதல்கட்ட தேர்தலில் தனக்குச் சாதகமான சூழல் இல்லாததை உணர்ந்த பா.ஜ.க. தற்போது நடக்கும் பிரச்சாரத்தில் மதக்கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிக்க முனைந்துள்ளது.
இதன் உச்சகட்டமாக பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் ஆற்றிய உரையில் தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கி உள்ளார்.

மோடியின் இஸ்லாமிய வெறுப்பு

ஏப்ரல் 21ஆம் தேதி ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் செல்வங்களை எல்லாம் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கும் கொடுத்து விடுவார்கள். இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாட்டின் வளங்களைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாமியர்களுக்கு தான் முன்னுரிமை என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் பெண்களின் நகைகள் கணக்கீடு செய்யப்பட்டு அது பகிர்ந்து அளிக்கப்படும் என்று உள்ளது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து யாருக்கு தரப் போகிறீர்கள்? ஊடுருவியவர்களுக்கா? என்று தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கியுள்ளார் மோடி.

இஸ்லாமியர்கள் மீதான பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பேச்சு உலகின் பல்வேறு நாடுகளில் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. மோடி, தேர்தல் பரப்புரையில் பேசிய மு ஸ்லிம்களுக்கு எதிரான விஷம் தோய்ந்த கருத்துக்களுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பிரதமர் அலட்சியம்:

ஆனால் அதை எல்லாம் அலட்சியப்படுத்திய பிரதமர் மோடி, மீண்டும் தான் பேசியது சரிதான் என்று ஆணவத்துடன் கொக்கரித்து இருக்கிறார். ராஜஸ்தானின் டோங் நகரில் நேற்று ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நேற்று முன்தினம் ராஜஸ்தானில் நான் சில உண்மைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தினேன். காங்கிரஸ் கட்சியானது உங்கள் சொத்துகளை எக்ஸ்ரே செய்யும் என அதன் தலைவர் கூறுகிறார். உங்களின் சொத்துகள் மற்றும் பெண்கள் அணியும் நகைகளை கணக்கெடுப்பதாகவும் அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். உங்களுக்கு இரண்டு வீடுகள் இருந்தால்கூட, அவர்கள் எக்ஸ்ரே செய்து ஒரு வீட்டைப் பறிப்பார்கள்.

இப்படியாக, மக்களின் சொத்துகளைப் பறித்து காங்கிரஸ் தனது ஸ்பெஷல் ஆட்களுக்கு விநியோகிக்க சதி செய்கிறது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தினேன். இதனால், ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியும் பீதியடைந்துள்ளது. அவர்களின் அரசியலை நான் அம்பலப்படுத்தியபோது, அவர்கள் என்னை திட்டும் அளவுக்கு கோபமடைந்தார்கள். எதிர்க்கட்சியினர் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள்? காங்கிரஸ் ஏன் தனது கொள்கைகளை மறைக்க விரும்புகிறது?

காங்கிர ஸ் வாக்கு வங்கி அரசியலில் முழுமையாக மூழ்கியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் சொத்துகளில் மு ஸ்லிம்களுக்கே முன்னுரிமை அளிப்பேன் எனக் கூறியது உண்மை. அந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்றேன்” என்று மீண்டும் மீண்டும் தமது மதவாத கருத்துக்களைக் கொட்டியுள்ளார். அது மட்டுமன்றி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பற்றியும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இட ஒதுக்கீடு:

“கடந்த 2004 இல் ஒன்றியத்தில் காங்கிர ஸ் ஆட்சி அமைத்ததும் முதலில் செய்த விஷயங்களில் ஒன்று, ஆந்திராவில் எ ஸ்.சி, எ ஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை குறைத்து, அதை இஸ்லாமியர்களுக்கு வழங்கியதுதான். அது ஒரு சோதனை முயற்சித் திட்டம். பின்பு அதனை நாடு முழுவதும் செயல்படுத்த காங்கிர ஸ் விரும்பியது. 2004 முதல் 2010-ஆம் ஆண்டு வரை நான்கு முறை இ ஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிர ஸ் முயற்சித்தது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசி இருப்பது அவரது சிந்தையில் நிறைந்திருக்கும் ஆர்.எ ஸ்.எ ஸ் கோட்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. காலம் காலமாக ஆர்.எ ஸ்.எ ஸ் இந்துத்துவா மதவெறி கும்பல் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து, இந்துராஷ்டிரம் அமைக்க முனைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கண்டனம்

எனவேதான் ஆர்.எ ஸ்.எ ஸ் தொட்டிலில் வளர்ந்த நரேந்திர மோடி, நாட்டின் பிரதமர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்த பிறகும் தனது ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பைக் கக்கி உள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

பிரதமரின் இந்த கீழ்த்தரமான பேச்சுக்களை தேர்தல் ஆணையம் வேண்டுமானால் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாட்டு மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். ஆட்சி அதிகாரத்திலிருந்து பா.ஜ.க. தூக்கி எறியப்படும் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

Tags: Loksabha electionpm modiPM Modi Hate Speech
Previous Post

Isha: ஒரே வருடத்தில் 1.12 கோடி மரக்கன்றுகள் – காவேரி கூக்குரல் உலக சாதனை

Next Post

விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள்; காவேரி கூக்குரலின் மிளகு சாகுபடி கருத்தரங்கில் அமைச்சர் பேச்சு

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023