வானில் நிகழும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவை ஆகும். சூரியன் – சந்திரன் – பூமி இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின்போது, நிலவானது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருகிறது. அப்போது, சூரியனின் ஒளியை நிலவு தற்காலிமாக தடுக்கிறது.
சூரிய கிரகணம்:
இந்த நிலையில், இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. நடப்பாண்டில் நிகழக்கூடிய இரண்டாவது சூரிய கிரகணம் இதுவாகும். இந்திய நேரப்படி, இன்று இரவு 8.34 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.25 மணி வரை நடக்கிறது.
இந்திய நேரப்படி இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நடப்பதால் இந்தியாவில் நாம் இந்த கிரகணத்தை காண இயலாது. இந்த நெருப்பு வளைய சூரியகிரகண நிகழ்வை வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் பல நாடுகளிலும், பசுபிக் கடல் பகுதிகளில் தெளிவாக காண முடியும்.
கோயில்களில் வழிபாடு:
அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் முதல் டெக்சாஸ் மாகாணம் வரை நன்றாக தெரியும். இந்த கிரகண நிகழ்வின் போது மெக்ஸிகோ, பெனிசுலா, பிரேசிலின் சில பகுதிகள், குவாத்தமாலா, ஹோண்டரஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா, பனாமா, கொலம்பியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலும் தெளிவாக தெரியும்.
சூரிய கிரகணம், புரட்டாசி சனிக்கிழமை என பல்வேறு சிறப்புகள் இன்று கூடி வருவதால் இன்று தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது.














