தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள லியோ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
லியோ ட்ரெயிலர்:
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ட்ரெயிலர் இன்று மாலை வெளியாகிறது. லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானதால் மிகவும் அதிருப்தியில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு லியோ படத்தின் ட்ரெயிலர் விருந்தாக அமைய உள்ளது. படம் நவராத்திரி ஸ்பெஷலாக வெளியாக உள்ள நிலையில், போஸ்டர், விஜய் லுக், பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ட்ரெயிலர் வெளியாக உள்ளது.
விக்ரம் படத்தின் தொடர்ச்சியா? லோகேஷ் கனகராஜின் யுனிவர்சா? லியோ கதாபாத்திரத்திற்கும், ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கும் தொடர்பு உள்ளதா? கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் வருவாரா? என்று பல கேள்விகளுடன் ரசிகர்கள் உள்ளதால் ட்ரெயிலர் மீதே இரட்டிப்பு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், திரிஷா, மன்சூர் அலிகான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர், காஷ்மீரில் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. லியோ படம் வரும் 19-ம் தேதி நவராத்திரி பண்டிகை கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரிலீசாகிறது. விஜய் ரசிகர்கள் லியோ பட ட்ரெயிலர் வெளியாக இருப்பதால் மிகப்பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.













