இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாகவும், தமிழ்நாட்டில் இருந்து மிக அருகில் உள்ள நாடாகவும் இருப்பது இலங்கை. அந்த நாட்டின் மிகப்பெரிய வருவாயாக இருப்பது சுற்றுலாத்துறை ஆகும். இலங்கையில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கு வரும் 7 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி நாட்டிற்குள் வர அந்த நாட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள.
இலவச விசா:
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், இதனடிப்படையில், விசாவை இலவசமாக வழங்குவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம்:
மேலும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு முன்னோடித் திட்டமான இந்த திட்டம் அடுத்தாண்டு 2024 மார்ச் 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இலங்கையின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் சரிந்தது. இதனால், அந்த நாட்டில் பெரும் கலவரம் ஏற்பட்டு ராஜபக்சே குடும்பத்தினரை அந்த நாட்டு மக்களே நாட்டை விட்டு துரத்திய சம்பவம் அரங்கேறியது.
பின்னர், பல்வேறு நாட்டினரும் அந்த நாட்டுக்கு வழங்கிய கடன்தொகை மூலமாக அந்த நாடு பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சுற்றுலா துறை மூலமாக அதிகளவு வருவாயை ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையில் தற்போது 7 நாடுகளின் சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் இலங்கைக்கு வர முடியும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.













