இந்திய திரையுலகின் பிரபலமான பாடகர்களில் ஒருவர் ஜெயச்சந்திரன். மலையாள திரையுலகைச் சேர்ந்த இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார். மொத்தம் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். இவர் உடல்நலக்குறைவால் கேரளாவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 80.
தமிழில் இவர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சலீல் சவுத்ரி, டி.ராஜேந்தர், கேவி மகாதேவன், குன்னக்குடி வைத்தியநாதன், சங்கர் கணேஷ், கங்கை அமரன், சந்திரபோஸ், எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா, வித்யாசாகர், பரணி, ஸ்ரீகாந்த் தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் ஆகிய பிரபலங்களின் இசையில் பாடியுள்ளார்.
தமிழில் இவர் பாடிய பிரபல பாடல்கள்:
தமிழில் முதன்முதலில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் தங்க சிமிழ் போல என்ற பாடலைப் பாடி பாடகராக அறிமுகமானார்.
வசந்த கால நதிகளிலே – மூன்று முடிச்சு
மாஞ்சோலை கிளிதானோ – அன்னக்கிளி
வாழ்க்கையே வேஷம் – ஆறிலிருந்து அறுபது வரை
கடவுள் வாழும் கோவிலிலே – ஒரு தலை ராகம்
தாலாட்டுதே வானம் – கடல் மீன்கள்
கவிதை அரங்கேறும் நேரம் – அந்த 7 நாட்கள்
வசந்த காலங்கள் – ரயில் பயணங்களில்
காளிதாசன் கண்ணதாசன் -சூரக்கோட்டை சிங்கக்குட்டி
மயங்கினேனன் சொல்லத் தயங்கினேன் – நானே ராஜா நானே மந்திரி
காத்திருந்து காத்திருந்து – வைதேகி காத்திருந்தாள்
ராசாத்தி உன்னை – வைதேகி காத்திருந்தாள்
இன்றைக்கு ஏன் இந்த – வைதேகி காத்திருந்தாள்
பூவ எடுத்து ஒரு மாலை – அம்மன் கோயில் கிழக்காலே
கொடியிலே மல்லியப்பூ – கடலோர கவிதைகள்
ஊரேல்லாம் சாமியாக – தெய்வ வாக்கு
கத்தாழம் காட்டுவழி – கிழக்குச் சீமையிலே
என் மேல் விழுந்த – மே மாதம்
சொல்லாமாலே யார் பார்த்தது – பூவே உனக்காக
இது காதலின் சங்கீதம் – அவள் வருவாளா
என தமிழில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
எஸ்.பி.முத்துராமன், ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என பல பிரபலங்களுக்கு பாடியுள்ளார்.














