நடிகர் சித்தார்த்தின் சித்தா திரைப்படம் மூலமாக 40,000 கருவிழி அறுவைசிகிச்சைகளை மேற்கொள்ள இத்திரைப்பட ப்ரீமியர் காட்சி மூலம் திரட்டப்படும் வருவாய் பயன்படுத்தப்படும்.
சித்தா பிரிமீயர் காட்சி
நடிகர் சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் இன்று தமிழகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சித்தா திரைப்பட குழுவினருடன் தொண்டு நிறுவனமான ஐ ரிசர்ஜ் சென்டர் இணைந்து கருவிழி அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டியுள்ளது.
இதற்காக பிரிமீயர் காட்சி சென்னையின் பிரபல திரையரங்கமான சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த பிரிமீயர் காட்சி வழியாக கிடைத்த தொகை மூலமாக 40 ஆயிரம் கருவிழி சிகிச்சைக்காக சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இச்சிறப்பான நிகழ்வு, சினிமாவின் ஈர்ப்பையும் மற்றும் மனிதாபிமானம் மிக்க கருணை உணர்வையும் ஒருங்கிணைத்த தருணமாக இருந்ததாக விழாவிற்கு வந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குனர் டாக்டர். அதியா அகர்வால் பேசுகையில், “வியப்பூட்டும் இந்த முன்னெடுப்பு நிகழ்வில் ஒரு தீவிர பங்காற்றுவது குறித்து நாங்கள் அளவில்லாத உற்சாகம் கொண்டிருக்கிறோம். திரைப்படத் துறையோடு ஒத்துழைப்புடன் செயல்படுவது என்பதற்கும் கூடுதலான இந்த தனிச்சிறப்பான நடவடிக்கை, பார்வைத்திறன் பிரச்சனைகளை கொண்டிருக்கும் நபர்களுக்கு பார்வைக்கான நம்பிக்கையையும், வாக்குறுதியையும் வழங்கும் ஒரு செயல்பாடாகவும் இருக்கிறது.
கருவிழி அறுவை சிகிச்சை:
இந்த திரைப்பட காட்சியின் வழியாக சேகரிக்கப்படும் நிதி, 40,000-க்கும் அதிகமான கருவிழி அறுவைசிகிச்சைகளை மேற்கொள்ள எங்களை திறன் உள்ளவர்களாக ஆக்கும். பார்வைத்திறன் இழந்த மற்றும் பாதிப்புள்ள நபர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடியதாக இந்த அறுவைசிகிச்சைகள் இருக்கும். கருவிழி சார்ந்த நோயினால் பார்வையற்றவர்களாக மாறியிருக்கும் 1.3 இலட்சம் இந்தியர்களின் வாழ்க்கையில் மீண்டும் வெளிச்சத்தை கொண்டு வருவதற்கு இந்த அறுவைசிகிச்சைகள் உதவும்.” என்று குறிப்பிட்டார்.
சித்தார்த் பெருமிதம்:
இதுதொடர்பாக நடிகர் சித்தார்த் கூறியதாவது, “உலகளவில் திரைப்பட ரசிகர்களையும் மற்றும் சமூக உறுப்பினர்களையும், உண்மையிலேயே அதிக பயனளிக்கும் ஒரு நோக்கத்திற்காக ஓரிடத்தில் ஒருங்கிணைக்க விழையும் இந்த சிறப்பான நடவடிக்கையில் ஆர்வமுள்ள ஒரு பங்கேற்பாளராக இடம்பெறுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இது, வெறுமனே ஒரு ப்ரீமியர் திரைப்படக்காட்சி மட்டுமல்ல, எனது இதயத்திற்கு முக்கியமான, நல்ல நோக்கத்திற்கான பங்களிப்பை வழங்குவதற்கான தருணமாகவும் இது இருக்கிறது.”
என்றார்.














