தமிழ்நாட்டின் முதன்மை பண்டிகையாகவும், தமிழர்களின் திருநாளாகவும் கருதப்படுவது பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
டோக்கன் விநியோகம்:
நடப்பாண்டிற்கு ரூபாய் 1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்தது. இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் அரசு நியாய விலைக்கடைகளில் டோக்கன்கள் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் காலை முதல் டோக்கன்கள் தீவிரமாக வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன்கள் சர்க்கரை மற்றும் பொருளில்லா குடும்ப அட்டைதாரர்கள் தவிர மற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2.47 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு, சர்க்கரை, பச்சரிசி வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கப்பட உள்ள முழுக்கரும்பை அரசு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது. இதற்காக கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பில் வெல்லம் வழங்கப்படாதது வெல்ல தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.














