Saturday, February 28, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Maha Shivratri 2026: பக்தர்களே! புதுச்சேரியில் ஈஷா மகாசிவராத்திரி நேரலை எங்கே?

ravi by ravi
12 February 2026
in செய்திகள்
0
Maha Shivratri 2026: பக்தர்களே! புதுச்சேரியில் ஈஷா மகாசிவராத்திரி நேரலை எங்கே?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்றது. அதன்படி ஆதியோகி ரத யாத்திரை புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது.

ஆதியோகி ரத யாத்திரை

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை நடத்தப்பட்டது.

தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் 4 ஆதியோகி ரதங்களை தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்து அவர்களின் அருளாசியினை வழங்கியுள்ளனர்.

அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.

தெற்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை டிசம்பர் 23-ம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

அதேபோன்று வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த டிசம்பர் 26-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்தாண்டு ஆதியோகி ரத யாத்திரை தமிழ்நாடு முழுவதும் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி:

வடக்கு மண்டலத்தை பொறுத்த வரையில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் துவங்கிய ரத யாத்திரை சென்னை, கிருஷ்ணகிரி, ஒசூர், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம் வழியாக பயணித்து 8-ஆம் தேதி புதுச்சேரி வந்தது.

புதுச்சேரியில் 8-ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் கருவாடிக் குப்பம் சித்தானந்த கோயிலில் ஆதியோகி ரத யாத்திரையை, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ரத யாத்திரையைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் லாஸ்பேட்டை, ஏர்போர்ட் ரோடு, முத்தியால்பேட்டை, எம்.ஜி ரோடு, அஜந்தா சிக்னல், ராஜா தியேட்டர், அண்ணா சதுக்கம்,புதிய பேருந்து நிலையம், நெல்லித்தோப்பு, முதலியார் பேட்டை, ரெட்டியார்பாளையம் வழியாகப் பயணிக்க உள்ளது.

புதுச்சேரியில் மஹாசிவராத்திரி விழா

கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலை செய்யப்படுகிறது.

அந்த வகையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா புதுச்சேரி லாஸ்பேட்டை இ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது.

ஆதியோகி ரதம்

ஆதியோகி ரதங்கள், 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொண்டு வருகின்றன. இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக சுமார் 30,000 கிலோமீட்டர் பயணத்து வருகின்றன.

ஆதியோகி ரதங்கள் பயணிக்கும் இடங்களில், அங்குள்ள ஆதீனங்கள், முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பை வழங்கி வருகின்றனர். ஆதியோகிக்கு விருப்பமுள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம்.

Tags: ishamahashivratri 2026
Previous Post

Maha Shivratri: சிவ பக்தர்களே! கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை

Next Post

Maha Shivratri 2026: மகாசிவராத்திரி கொண்டாட்டம்… ஈஷாவிற்கு வரும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

ravi

ravi

Next Post
Maha Shivratri 2026: மகாசிவராத்திரி கொண்டாட்டம்… ஈஷாவிற்கு வரும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Maha Shivratri 2026: மகாசிவராத்திரி கொண்டாட்டம்... ஈஷாவிற்கு வரும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026
Isha: ஈஷாவில் மகாசிவராத்திரி கோலாகல கொண்டாட்டம்.. ராஜ்நாத்சிங்   பங்கேற்பு! பக்தி பரவசத்தில் மக்கள்!

Isha: ஈஷாவில் மகாசிவராத்திரி கோலாகல கொண்டாட்டம்.. ராஜ்நாத்சிங் பங்கேற்பு! பக்தி பரவசத்தில் மக்கள்!

16 February 2026
Maha Shivratri 2026: மகாசிவராத்திரி கொண்டாட்டம்… ஈஷாவிற்கு வரும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Maha Shivratri 2026: மகாசிவராத்திரி கொண்டாட்டம்… ஈஷாவிற்கு வரும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

13 February 2026
Maha Shivratri 2026: பக்தர்களே! புதுச்சேரியில் ஈஷா மகாசிவராத்திரி நேரலை எங்கே?

Maha Shivratri 2026: பக்தர்களே! புதுச்சேரியில் ஈஷா மகாசிவராத்திரி நேரலை எங்கே?

12 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023