கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படும் உலகக்கோப்பை இன்று அகமதாபாத்தில் தொடங்குகிறது. டி20 போட்டி கிரிக்கெட்டின் சுவாரஸ்யத்தை கூட்டினாலும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
உலகக்கோப்பை தொடக்கம்:
பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என இரண்டு தரப்பினருக்கும் சரிசமமான வாய்ப்புகளும், சவால்களும் காத்திருக்கும் ஒரு தொடர் என்றால் அது ஒருநாள் போட்டி ஆகும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த உலகக்கோப்பை தொடர் ரசிகர்களால் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும்.
தொட
கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியும், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணியும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் 1 லட்சம் ரசிகர்கள் வரை அமரலாம் என்பதால் போட்டியை காண வெளிநாட்டு ரசிகர்களுடன் இந்திய ரசிகர்களும் குவிவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இங்கிலாந்து – நியூசிலாந்து
இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக பென்ஸ்டோக்ஸ் களமிறங்குவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், பட்லர். பார்ஸ்டோ, மலன், ரூட், லிவிங்ஸ்டன், மொயின் அலி என்ற வலுவா பேட்டிங் படை அவர்களிடம் உள்ளது. பந்துவீச்சிலும் சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ரஷீத் உள்ளனர்.
நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், லாதம், கான்வே, யங், மிட்செல் சாப்மன், பிளிப்ஸ், ரவீந்திரா பேட்டிங்கில் அசத்துவார்கள் என நம்பலாம். பவுலிங்கில் பெர்குசன், சவுதி, சான்ட்னர், சோதி, போல்ட் சிறப்பாக செயல்பட வேண்டும். இன்னும் 2 மணி நேரத்தில் இந்த போட்டி தொடங்க உள்ளது.













