Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

ODI WC Semi Final: தென்னாப்பிரிக்காவிற்கும், அரையிறுதிக்கும் ஏழாம் பொருத்தம் போல! தொடரும் சோக வரலாறு!

ravi by ravi
17 November 2023
in செய்திகள், விளையாட்டு
0
ODI WC Semi Final: தென்னாப்பிரிக்காவிற்கும், அரையிறுதிக்கும் ஏழாம் பொருத்தம் போல! தொடரும் சோக வரலாறு!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்று தென்னாப்பிரிக்க அணி. ஆனால், அவர்களுக்கும் உலகக்கோப்பைக்கும் மட்டும் ஏனோ ஏழாம் பொருத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 4 முறை அரையிறுதி வரை முன்னேறியும் ஒரு முறை கூட இறுதிப்போட்டிக்கு செல்லாத தென்னாப்பிரிக்கா அணிக்கு 5வது முறையாக நேற்று பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பையும் கோட்டைவிட்டது தென்னாப்பிரிக்க அணி.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது தென்னாப்பிரிக்க அணி. இதன்மூலம் லீக் சுற்றில் அபாரமாக ஆடிய தென்னாப்பிரிக்க அணி அரையிறுதியுடன் தொடரை விட்டு வெளியேறியது.
தென்னாப்பிரிக்க அணிக்கு உலகக்கோப்பை அரையிறுதியில் இதுவரை நடந்தது என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

1992ம் ஆண்டு உலகக்கோப்பை:

1992ம் ஆண்டு முதன்முதலாக உலகக்கோப்பை அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்கா அணி முன்னேறியது. அந்த போட்டியில் மழை காரணமாக ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 252 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், 19 பந்துகளில் 22 ரன்கள் என்ற நிலை மாறி, டி.ஆர்.எஸ். விதிப்படி 7 பந்துகளில் 22 ரன்கள் என்று மாற்றப்பட்டது. பின்னர், டி.ஆர்.எஸ். விதிப்படி 1 பந்தில் 22 ரன்கள் என்று மாற்றப்பட்டது. இதனால், தென்னாப்பிரிக்கா பரிதாபமாக தொடரை விட்டு வெளியேறியது.

1999ம் ஆண்டு உலகக்கோப்பை:

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்த அரையிறுதியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 214 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்க அணிக்காக காலீஸ், ஜான்டி ரோட்ஸ் சிறப்பான ரன்களை சேர்க்க கடைசி கட்டத்தில் குளூஸ்னர் அதிரடியில் மிரட்டினார்.

குறிப்பாக, கடைசி ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை சமன் செய்தார். மறுமுனையில் அனைவரும் ஆட்டமிழக்க கடைசி விக்கெட்டாக ஆலன் டொனால்ட் நின்றிருந்தார். வெற்றிக்கான ஒரு ரன்னை எடுக்க இவர் ஓட, ஆனால், டொனால்டோ எங்கேயோ வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார். தாமதமாகவே டொனால்ட் ஓடியதால் அதற்குள் ஆஸ்திரேலிய வீரர்கள் அவரை ரன் அவுட்டாக்கிவிட்டனர். இதனால், ஸ்கோர் சமன் ஆனது. ரன் ரேட் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேற, தென்னாப்பிரிக்கா தொடரை விட்டு வெளியேறியது.

2007ம் ஆண்டு உலகக்கோப்பை:

வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 2007ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதியில் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கில் சொதப்பியது. ஸ்மித், டிவிலியர்ஸ், காலீஸ், பிரின்ஸ், மார்க் பவுச்சர் என அனைவரும் சொதப்ப கெம்ப் மட்டும் 49 ரன்கள் சேர்த்தார். 149 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல் அவுட்டாகியது. 150 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்களை எடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

2015ம் ஆண்டு உலகக்கோப்பை:

2015ம் ஆண்டு உலகக்கோப்பையில் நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியிலும் மழை குறுக்கிட முதலில் தென்னாப்பிரிக்கா பேட் செய்தது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்களை எடுத்தது. டுப்ளிசிஸ், மில்லர், டிவிலியர்ஸ் சிறப்பாகவே பேட் செய்தனர். பின்னர், 43 ஓவர்களில் 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நியூசிலாந்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 1 பந்து எஞ்சியிருந்த நிலையில் வெற்றி பெற்றது. வெற்றியின் அருகில் வரை சென்ற தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த தோல்வி பெரும் ஏமாற்றமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

Tags: AUSvsSAODI WC 2023ODI WC Semi FinalODI World Cup 2023SAvsAUS
Previous Post

Thalapathy 68: மோகன், பிரசாந்த் வாழ்வில் விடியலைத் தருமா விஜய் படம்?

Next Post

ODI WC FinaL IND vs AUS: இன்னும் சற்றுநேரம்தான்! உலகக் கோப்பையை கைப்பற்றப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023