Saturday, April 11, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

ODI WC FinaL IND vs AUS: இன்னும் சற்றுநேரம்தான்! உலகக் கோப்பையை கைப்பற்றப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?

ravi by ravi
19 November 2023
in செய்திகள், விளையாட்டு
0
ODI WC FinaL IND vs AUS: இன்னும் சற்றுநேரம்தான்! உலகக் கோப்பையை கைப்பற்றப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடர முழுவதும் வெற்றியை பெற்ற இந்திய அணி, பின்பாதியில் பழைய பலத்துடன் மீண்டு இறுதிப்போட்டிக்கு வந்த ஆஸ்திரேலியாவும் உலகக்கோப்பைக்காக மல்லுகட்டுகின்றன. பலமிகுந்த இரு அணிகள் மோதுவதால் கோப்பை யாருக்கு? என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பேட்டிங்:

இந்திய அணியை பொறுத்தவரையில் சொந்த மண்ணில் ஆடுவதும், லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு இருப்பதும் பெரும் பலம் ஆகும். இந்திய அணி இந்த தொடர் தொடங்கியது முதல் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்திய அணியின் பெரும் பலமாக பேட்டிங்கில் ரோகித்சர்மா, விராட்கோலி, சுப்மன்கில், ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் உள்ளனர். இவர்கள் அனைவரும் சிறப்பாக ஆட வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையிலும் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்க அளிக்க வேண்டியது அவசியம் ஆகும். மிடில் ஆர்டரில் லபுஷேனே, ஸ்மித் சிறப்பாக ஆட வேண்டியது முக்கியம். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசி ஆட்டத்தையே மாற்றிய மேக்ஸ்வெல் மிகவும் ஆபத்தான வீரராக கருதப்படுகிறார். அவரை விரைவிலே அவுட்டாக்க வேண்டியது இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் ஆகும். ஸ்டோய்னிஸ், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆல்ரவுண்டர்களாகவும் இருப்பது அந்த அணிக்கு பலம் ஆகும்.

பவுலிங்:

இந்திய அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் பும்ரா, ஷமி, சிராஜ் முக்கிய தூண்களாக உள்ளனர். குறிப்பாக, இந்த தொடர் முழுவதும் வேகத்தில் அசத்தி வரும் ஷமி இன்றைய போட்டியிலும் ஆஸ்திரேலியாவை நிலை குலைய வைக்க வேண்டியது அவசியம் ஆகும்.

அதேபோல, சுழலில் ஜடேஜா, குல்தீப் இந்திய அணியின் துருப்புச்சீட்டு ஆவார்கள். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஸ்டோய்னிஸ், கம்மின்ஸ் முக்கிய பந்துவீச்சாளர்களாக உள்ளனர். இவர்களுடன் ஜம்பா சுழலில் முக்கியமான வீரராக உள்ளார். ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லுக்கு நிகராக இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் உள்ளார். இவருக்கு ஆட்டம் பிடித்துவிட்டால் மைதானத்தில் நிச்சயம் சரவெடியை காணலாம்.

சாம்பியன் யார்?

மொத்தத்தில் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 20 ஆண்டுகள் பகையை இந்தியா தீர்த்து 3வது முறையாக கோப்பையை கையில் ஏந்தபோகிறதா? இல்லை ஆஸ்திரேலியா மீண்டும் ஒரு முறை இந்தியாவை வீழ்த்தப் போகிறதா? என்பது இன்றைய நாள் முடிவில் தெரிய வரும்.

Previous Post

ODI WC Semi Final: தென்னாப்பிரிக்காவிற்கும், அரையிறுதிக்கும் ஏழாம் பொருத்தம் போல! தொடரும் சோக வரலாறு!

Next Post

ODI WC Final: ‘தோற்றாலும் நீ வீரன்தான்’ வெல்டன் மை டியர் டீம் இந்தியா!

ravi

ODI WC Final: 'தோற்றாலும் நீ வீரன்தான்' வெல்டன் மை டியர் டீம் இந்தியா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023