Tuesday, February 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

மறக்க முடியா நிகழ்வாக மாறிய மேத்யூஸின் அவுட்! டைம் அவுட் என்றால் என்ன?

ravi by ravi
7 November 2023
in செய்திகள், விளையாட்டு
0
மறக்க முடியா நிகழ்வாக மாறிய மேத்யூஸின் அவுட்! டைம் அவுட் என்றால் என்ன?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகக் கோப்பைத் தொடர் என்றாலே விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே சொல்ல வேண்டும். இந்த உலகக்கோப்பைத் தொடரும் அதற்கு விதி விலக்கல்ல. இந்த சூழலில், இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரில் இலங்கை – வங்கதேச அணிகள் மோதிய போட்டியும், மேத்யூஸ் பெயரும் காலத்திற்கும் மறக்க முடியாத அளவிற்கு மாறியுள்ளது.

டைம் அவுட்:

ஆட்டத்தின் 25வது ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். அந்த ஓவரில் நன்றாக ஆடிக் கொண்டிருந்த சமரவிக்ரம 41 ரன்களில் அவுட்டானார். அடுத்து மேத்யூஸ் இறங்க வேண்டும். அப்போது, அவர் களமிறங்க தாமதமானதால் அவருக்கு அவுட் வழங்கப்பட்டது. டைம் அவுட் என்ற முறையில் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முழு காரணம் ஷகிப் அல் ஹசனே ஆகும்.

தான் களமிறங்குவதற்கு தன்னுடைய ஹெல்மெட் பட்டை சரியில்லாததும், அதன் காரணமாகவே தான் வருவதற்கு தாமதமானதாகவும் அவர் நடுவர்களிடமும், வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனிடமும் மைதானத்தில் நீண்ட விளக்கம் அளித்தார். ஆனால், அவரது விளக்கத்தை சற்றும் ஏற்றுக் கொள்ளாத ஷகிப் அல் ஹசன் தன்னுடைய அப்பீலை திரும்ப பெற முடியாது என்றும், விதி அப்படித்தான் உள்ளது என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால், வேறு வழியில்லாமல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதன்முறையாக டைம் அவுட் முறையில் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனைக்கு மேத்யூஸ் ஆளானார்.

விதிகள் சொல்வது என்ன?

கிரிக்கெட் விதிப்படி ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்தவுடன் அடுத்த வீரர் 3 நிமிடத்திற்குள் மைதானத்திற்குள் வர வேண்டும். அவ்வாறு அவர் வரத் தவறினால் அவர் அவுட்டானதாக அறிவிக்க வேண்டும் என்று எதிரணி கேப்டன் அப்பீல் செய்யலாம். அவ்வாறு அப்பீல் செய்தால் அந்த புதிய பேட்ஸ்மேன் எந்த பந்தையும் சந்திக்காமலே அவுட் என்று அறிவிக்கலாம் என்று விதி கூறுகிறது. ஆனால், அறத்தின்படி விளையாட வேண்டும் என்று நினைக்க வேண்டும் என்று நினைக்கும் எந்த வீரரும், கேப்டனும் அதை விரும்புவதில்லை.

ஆனால், வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் தன்னுடைய கடைசி உலகக்கோப்பையில் ஆடும் ஒரு மூத்த வீரரை இந்த முறையில் அவுட்டாக்கி வெளியேறச் சொன்னது பலருக்கும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், மேத்யூஸ் தன்னுடைய சூழலை விளக்கியும் அதை அவர்கள் ஏற்காதது ரசிகர்களுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது என்றே கூற வேண்டும்.

மேத்யூஸ் எடுத்த ரிவெஞ்ச்:

ஷகிப் அல் ஹசனின் இந்த செயலுக்கு அவரை அவுட்டாக்கிய மேத்யூஸ் டைம் ஆகிவிட்டது கிளம்பு என்று சொல்வது போல சைகை செய்ததுதான் இந்த ஆட்டத்தின் ஹைலைட் என்றே சொல்ல வேண்டும். கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்று சொல்லப்பட்டாலும் சமீபகாலமாக ஆக்ரோஷங்களும், மோதல்களும் பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகிறது. ஆனால், இந்த மன்கட், டைம் அவுட் முறைகளை எந்த அணியும், எந்த வீரரும் விரும்புவதில்லை.

Tags: angelo mathewscricketODI WC 2023Shakib Al HasanSL vs BANtimed out
Previous Post

மதுரையில் ஈஷாவின் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா – நாளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்கிறார்

Next Post

தீபாவளி பண்டிகையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் தெரியுமா?

ravi

ravi

Next Post
தீபாவளி பண்டிகையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் தெரியுமா?

தீபாவளி பண்டிகையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023