Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

காவேரி கூக்குரலின் “ஒரு கிராமம் ஒரு அரசமரம்” திட்டம் கோலாகல தொடக்கம்

ravi by ravi
25 April 2025
in செய்திகள்
0
காவேரி கூக்குரலின் “ஒரு கிராமம் ஒரு அரசமரம்” திட்டம் கோலாகல தொடக்கம்
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரச மரங்களை நடும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டத்தின்’ துவக்க விழா நேற்று பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஒரு கிராமம் ஒரு அரசமரம்:

இதில் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் “ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாகி வருவதாக ஐ.நா-வின் சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருவதாகவும், இதற்கு எளிமையான தீர்வு மரங்கள் நடுவதே” எனக் கூறினார்.

பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் அரச மரங்களை நடும் “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திற்கான திட்ட துவக்க விழா நேற்று நடைபெற்றது.

மரக்கன்று நடும் திட்டம்:

இவ்விழாவில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி, நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகன், சிவகாசி பசுமை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் மற்றும் காவேரி கூக்குரல் இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் ஆகியோர் இணைந்து முதல் மரக் கன்றினை நட்டு திட்டப் பணிகளை துவக்கி வைத்தனர்.

இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் இத்திட்டம் குறித்து விளக்கி பேசுகையில், “சத்குரு கடந்த 2004-ஆம் ஆண்டு ‘பசுமை கரங்கள்’ என்ற இயக்கத்தினை துவங்கிய போது ஒரு கிராமத்தில் 5 அரச மரங்களை வைத்து வளர்த்தால் அது மக்களின் உடல் மற்றும் மனநலத்திற்கு நல்லது எனக் கூறினார்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் அரச மரங்களை நடுவதை இலக்காக கொண்டு பேரூர் ஆதீனம் 24-ஆவது குரு மகாசன்னிதானம் அவர்களின் நூற்றாண்டு நிறவையொட்டி, தற்போதைய 25-ஆவது ஆதீனத்துடன் இணைந்து “ஒரு கிராமம் அரச மரம்” திட்டத்தினை செயல்படுத்துகிறோம்.

ஐநா எச்சரிக்கை:

ஐ.நா-வின் சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றின் அறிக்கையின் படி, ஒரு நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் தரிசாகி வருகின்றது. தமிழகத்தில் 50 சதவீத நிலம் தரிசாகி உள்ளது. மேலும் இதே நிலை நீடித்தால் 2050-இல் உலகில் 90 சதவீத நிலம் விவசாயத்திற்கு பயன்படும் நிலையில் இருக்காது எனக் கூறப்படுகிறது. அதே போன்று அடுத்த 20 வருடங்களில் உணவு உற்பத்தியும் குறைந்து உணவு பற்றாக்குறை ஏற்படும் எனக் கூறுகிறார்கள். 33 சதவீதம் பசுமை பரப்பு இல்லை என்றால் நாடு பாலைவனம் ஆகும். இதற்கு எல்லாம் மரங்கள் நடுவதே ஒரே தீர்வு.

இதன் காரணமாகவே மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து விவசாய நிலத்தில் மரங்களை நடுவதன் மூலம் மண் வளத்தை அதிகரித்து நதிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடு காவேரி கூக்குரல் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் 1.5 கோடி மரக் கன்றுகளை விளைவித்து விவசாயிகளுக்கு மானிய விலையில் காவேரி கூக்குரல் இயக்கம் வழங்கி வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அருளுரை வழங்கி பேசிய பேரூர் ஆதீனம், “நமது கிராமங்களில் அரச மரங்களை நட்டு வளர்த்து பசுமையான சூழலை உருவாக்குவதோடு நம் பண்பாட்டினை மீட்டெடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படும். வெறும் மரக்கன்றுகள் நடுவதோடு நிற்காமல் இதற்காக கிராமங்கள் தோறும் குழுக்களை உருவாக்கி கல்வி கற்க முடியாதவர்களுக்கு உதவுதல், கிராமங்களில் தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்க தேவையான செயல்களை செய்தல் போன்றவற்றை செய்ய வேண்டும்.” எனப் பேசினார்.

Tags: ishakaveri kookural
Previous Post

DMK: சட்டசபையில் ஷாக் தந்த பிடிஆர்.. தேர்தல் நேரத்தில் இப்படியா? உட்கட்சி மோதலை சரி செய்வாரா மு.க.ஸ்டாலின்?

Next Post

CSK: தொடரை விட்டு வெளியேறிய சிஎஸ்கே! பலவீனமாக மாறிய பலம் – காரணங்கள் இதுதான்

ravi

ravi

Next Post
CSK: தொடரை விட்டு வெளியேறிய சிஎஸ்கே! பலவீனமாக மாறிய பலம் – காரணங்கள் இதுதான்

CSK: தொடரை விட்டு வெளியேறிய சிஎஸ்கே! பலவீனமாக மாறிய பலம் - காரணங்கள் இதுதான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023