Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Isha: ஈஷாவில் கோலாகலமாக நடந்த தமிழ் தெம்பு திருவிழா நிறைவு; ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

ravi by ravi
11 March 2025
in செய்திகள்
0
Isha: ஈஷாவில் கோலாகலமாக நடந்த தமிழ் தெம்பு திருவிழா நிறைவு; ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்று வந்த ‘தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா’ நேற்று மாலையோடு நிறைவு பெற்றது. பிப்ரவரி 27-ஆம் தேதி துவங்கி கடந்த 12 நாட்களாக நடைபெற்ற இவ்விழாவில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

தமிழ் தெம்பு திருவிழா:

தமிழ் பண்பாட்டின் தொன்மை மற்றும் செழுமையை பறைசாற்றும் விதமாக ஈஷாவில் கடந்த 3 வருடங்களாக தமிழ்த் தெம்பு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு விழா கோலகலமாகவும் மிக பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது.

இத்திருவிழாவில் தமிழ் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் 150-க்கும் மேற்பட்ட கண்காட்சி, விற்பனை மற்றும் தமிழ் கலைகளின் பயிற்சி பட்டறை அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்:

இதில் பாரம்பரிய முறையில் தானியங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் கடலூரைச் சேர்ந்த ஆதிசுவை இயற்கை அங்காடியின் நிறுவனர் கூறுகையில், “தமிழ்த் தெம்பு திருவிழாவில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். அவர்களிடம் இயற்கை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தமிழ் பண்பாட்டு உணவு பொருட்களை கொண்டு செல்ல உதவியாக இந்த விழா அமைந்து இருக்கிறது” எனக் கூறினார்.

இந்த 150 அரங்குகளில் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் குறிப்பாக தஞ்சாவூர் ஓவியம், கள்ளக்குறிச்சி மரசிற்பம், சுவாமிமலை ஐம்பொன் சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் பொம்மைகள், தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள், மகாபலிபுரம் கற்சிற்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.

பயிற்சி பட்டறைகள்:

அதே போன்று தமிழ் பண்பாட்டு கலைகளின் இலவச பயிற்சி பட்டறைகளில் பல ஆண்டுகள் அந்தந்த கலைகளில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் நேரில் வந்து பயிற்சி அளித்தனர். தஞ்சாவூர் நெட்டி வேலைபாடுகள் குறித்து குடந்தை சொக்கலிங்கம், ஐம்பொன் சிலைகள் குறித்து சுவாமிமலை ஸ்தபதி செல்வம், இயற்கை சாயம் குறித்து சிவராஜ், குறும்பர் ஓவியம் குறித்து சண்முகப்பிரியா, அகழ்வாராய்ச்சி குறித்து விழுப்புரம் வீரராகவன்-மங்கை தம்பதி, தோல் பாவை கூத்து குறித்து எலிசபத் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் இந்த பயிற்சி பட்டறைகளை வழி நடத்தினர்.

பாரம்பரிய கலைகள்:

தோல்பாவை கூத்து கலை குறித்து பயிற்சி அளித்த புதுச்சேரியை சேர்ந்த எலிசபத் ராணி கூறுகையில், “ஈஷாவில் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன், இங்கு அனைவரும் அன்புடன் பழகுகிறார்கள். என்னுடைய கலையை இத்தனை மக்களுக்கு கொண்டு சேர்க்க அவர்கள் எடுத்து இருக்கும் இந்த முயற்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக தினமும் மாலையில் குச்சி ஆட்டம், பெரிய மேளம், கம்பத்து ஆட்டம், சிலம்பம், ஒயிலாட்டம், வள்ளிகும்மி, தேவராட்டம், காவடியாட்டம், சலங்கையாட்டம், ஜமாப், கரகம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கலை நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டின் தூத்துக்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கலைஞர்கள் வழங்கினர்.

இசைக்கு முன்னுரிமை:

மேலும் சிலம்பம், கவிதை, கட்டுரை, ஓவியம், கோலம் மற்றும் பறையிசை போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல்முறையாக நடைபெற்ற பறையிசைப் போட்டியில் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியின் கலைக் குழு மிகச் சிறப்பான முறையில் பறையடித்து முதல் பரிசை வென்றனர்.

பறையிசைப் போட்டிக்கு நடுவராக இருந்த பனையூர் ராஜா இது குறித்து கூறுகையில், “ஈஷா பறை இசைக்கு முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை கொடுத்துள்ளது, அதற்கு பறை இசை கலைஞர்களாகிய நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். ஒரு பறை இசைக் கலைஞராக 40 ஆண்டு காலமாக இந்த துறையில் இருக்கின்றேன், என் அனுபவத்தில் இதுவே முதன்முறையாக பறை இசைக்கென்று போட்டி ஒன்று நடைபெற்று பறை இசைக்கலைஞர்கள் அங்கீகரிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்த் தெம்பு திருவிழாவில் பறையிசை போட்டிகளை நடத்தி, அதில் நடுவராக பங்கேற்க என்னை அழைத்தற்கு மிக்க நன்றி.” எனக் கூறினார்.

தமிழ்த் தெம்பு திருவிழாவின் மற்றொரு அங்கமாக நேற்று முன்தினம் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இத்திருவிழாவில் மூன்று நாட்கள் நடைபெற்ற நாட்டு மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தை நடைபெற்றது. தமிழ்த் தெம்பு திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து அரங்குகள் அமைந்த அனைவரும் ஈஷாவிற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர். 12 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரில் பங்கேற்று பயனடைந்தனர்.

Tags: coimbatoreishaisha yoga centretamilnadu
Previous Post

Isha: தமிழ் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

Next Post

Isha: 14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி! 64 நாட்டு மக்கள் பங்கேற்பு

ravi

ravi

Next Post
Isha: 14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி! 64 நாட்டு மக்கள் பங்கேற்பு

Isha: 14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி! 64 நாட்டு மக்கள் பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023