Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home ஆன்மீகம்

Isha: திருவண்ணாமலை கோவிலில் தேவாரம் பாடிய சத்குரு குருகுல மாணவர்கள்!

ravi by ravi
21 January 2025
in ஆன்மீகம், செய்திகள்
0
Isha: திருவண்ணாமலை கோவிலில் தேவாரம் பாடிய சத்குரு குருகுல மாணவர்கள்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சத்குரு குருகுல மாணவர்களின் தேவார பண்ணிசை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பாரம்பரிய பண்ணிசை மரபில் மாணவர்கள் பாடிய தேவார பதிகங்களை நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

தேவார நாயன்மார்கள்:

தேவாரம் எனும் அற்புத கொடையை நமக்கு அருளிச் சென்ற ‘தேவார நாயன்மார்களுக்கு’ நன்றியுணர்வை வெளிப்படுத்தவும், இன்றைய இளைஞர்கள் மத்தியில் தேவாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் சத்குருவின் வழிக்காட்டுதலில் சம்ஸ்கிருதி மாணவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 15-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்:

அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அமைந்துள்ள கலையரங்க மண்டபத்தில் சத்குரு குருகுல மாணவர்கள் தேவாரப் பாடல்களை பாடினர். இதில் கோவிலுக்கு வந்த நூற்றுக்கணக்கான சிவனடியார்களும் பக்தர்களும் பங்கேற்று தேவாரப் பாடல்களை கேட்டு, பாடிய மாணவர்களை வெகுவாகப் பாராட்டினர்.

முன்னதாக இந்நிகழ்ச்சி பேரூர் ஆதீனம், காமாட்சி புரம் ஆதீனம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர், சிரவை ஆதீனம், மயிலை கபாலீஸ்வரர், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர், கொடுமுடி மகுடேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நடைபெற்றது.
தேவாரம்:

சத்குரு தேவாரம் குறித்து பேசுகையில் “தமிழ் கலாச்சாரம் என்பது அடிப்படையாக பக்தியை மூலமாக வைத்து வளர்ந்த கலாச்சாரம். பக்தி என்றால் எல்லையில்லாத ஈடுபாடு. திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் இது போல பல மகான்கள் பக்தி பரவசத்தில் உருவாக்கிய கலாச்சாரம் இந்த தமிழ் மண்ணில் சேர்ந்திருக்கிறது. இந்த பக்தியின் வெளிப்பாடாக தமிழ் மண்ணில் தேவாரம் வெளிப்பட்டது. இதை அனைவரும் கேட்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

நம் தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக தேவார திருமுறைகள் சிவ பக்தர்களாலும், ஓதுவார்களாலும் கோவில்கள் தோறும் பாடப்பட்டு வந்துள்ளது. அந்த மரபின் தொடர்ச்சியாக சத்குரு குருகுலத்தின் ஒரு அங்கமான சம்ஸ்கிருதி பள்ளியில் மாணவர்களுக்கு சிறுவயது முதலே தேவாரப் பாடல்கள் பாரம்பரிய முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

மகாசிவராத்திரி:

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரி, நவராத்திரி, குரு பௌர்ணமி, தியானலிங்க பிரதிஷ்டை தினம் உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்பு தேவார பாடல்களை இந்த மாணவர்கள் பாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: ishathirunvannamalai
Previous Post

Priya Saroj: சிக்ஸர் மன்னன் ரிங்குசிங்கிற்கு டும் டும் டும்! கல்யாண பொண்ணு யாரு தெரியுமா?

Next Post

கோமிய விவகாரம்: சென்னை ஐஐடியின் இயக்குநர் பதவிக்கு லாயக்கற்றவர் பேரா.காமகோடி – எஸ்டிபிஐ கடும் கண்டனம்

ravi

கோமிய விவகாரம்: சென்னை ஐஐடியின் இயக்குநர் பதவிக்கு லாயக்கற்றவர் பேரா.காமகோடி - எஸ்டிபிஐ கடும் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023