Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

தமிழகம் முழுவதும் சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி!

ravi by ravi
17 January 2025
in செய்திகள்
0
தமிழகம் முழுவதும் சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் சத்குரு குருகுலம் சமஸ்கிருதி மாணவர்கள் தேவார பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர். இதன் முதல் நிகழ்ச்சி பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் முன்னிலையில் துவங்கப்பட உள்ளது.

தேவாரம்:

இது தொடர்பான தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் பாலசுப்ரமணியன் பேசுகையில் “சிவபெருமானின் அருமைகளையும், சிவநெறியின் பெருமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் இனிய பண்ணுடன் பக்தி ததும்ப பாடிய பாடல்கள் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது.

பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தேவாரம் எனும் அற்புத கொடையை நமக்கு அருளிச் சென்ற ‘தேவார நாயன்மார்களுக்கு’ நன்றியுணர்வை வெளிப்படுத்தவும், இன்றைய இளைஞர்கள் மத்தியில் தேவாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் சத்குருவின் வழிக்காட்டுதலில் சமஸ்கிருதி மாணவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 15-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர்.

சிவாலயங்களில் கச்சேரி:

சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி பள்ளியை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் மொத்தம் 4 குழுக்களாக பிரிந்து சென்று இந்த தேவார பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

அந்த வகையில் பேரூர் ஆதீனத்தில் ஜன 17 ஆம் தேதி துவங்கும் இந்நிகழ்ச்சி ஜனவரி 18-ஆம் தேதி காமாட்சி புரம் ஆதீனம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலையில் எப்போது கச்சேரி?

அதே போல் ஜனவரி 19-ஆம் தேதி சிரவை ஆதீனம், மயிலை கபாலீஸ்வரர் கோவில், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், திருவானைக்கால் ஜம்புகேஸ்வரர் கோவில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஜனவரி 20-ஆம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. சத்குரு தேவாரப் பாடல்களின் மகத்துவத்தை குறிப்பிட்டு பல்வேறு தருணங்களில் பேசியுள்ளார். பக்திப் பெருக்கை வெளிப்படுத்தும் தேவாரப் பாடல்களை மக்கள் அனைவரும் ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற மஹாசிவராத்திரி விழாவில் சம்ஸ்க்ருதி மாணவர்களால் பாரம்பரிய பண்ணுடன் பாடப்பட்ட தேவார இசைத்தட்டினை சத்குரு அறிமுகம் செய்தார்.

தமிழ் கலாச்சாரம்:

அப்போது சத்குரு தேவாரம் குறித்து பேசுகையில் “தமிழ் கலாச்சாரம் என்பது அடிப்படையாக பக்தியை மூலமாக வைத்து வளர்ந்த கலாச்சாரம். பக்தி என்றால் எல்லையில்லாத ஈடுபாடு. யார் ஒருவர் முழு பக்தியோடு ஏதோவொரு செயலில் ஈடுபடுகிறார்களோ, எந்த செயலாக இருந்தாலும் யார் முழுமையாக பக்தியோடு அவரின் செயலை செய்கிறார்களோ அவர்கள் எப்போதும் பரவசத்தில் இருப்பார்கள்.

இந்த தமிழ் கலாச்சாரத்தில் பல பக்தர்கள் இந்த பரவசத்திலேயே வாழ்ந்தார்கள். திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் இது போல பல மகான்கள் பக்தி பரவசத்தில் உருவாக்கிய கலாச்சாரம் இந்த தமிழ் மண்ணில் சேர்ந்திருக்கிறது. இந்த பக்தியின் வெளிப்பாடாக தமிழ் மண்ணில் தேவாரம் வெளிப்பட்டது. இதை அனைவரும் கேட்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

நம் தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக தேவார திருமுறைகள் சிவ பக்தர்களாலும், ஓதுவார்களாலும் கோவில்கள் தோறும் பாடப்பட்டு வந்துள்ளது. அந்த மரபின் தொடர்ச்சியாக சத்குரு குருகுலத்தின் ஒரு அங்கமான சம்ஸ்கிருதி பள்ளியில் மாணவர்களுக்கு சிறுவயது முதலே தேவாரப் பாடல்கள் பாரம்பரிய முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரி, நவராத்திரி, குரு பௌர்ணமி, தியானலிங்க பிரதிஷ்டை தினம் உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்பு தேவார பாடல்களை இந்த மாணவர்கள் பாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: ishamaha shivratriShivalaya
Previous Post

Pongal 2025: ஈஷாவில் களைகட்டிய பொங்கல்! லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்!

Next Post

Priya Saroj: சிக்ஸர் மன்னன் ரிங்குசிங்கிற்கு டும் டும் டும்! கல்யாண பொண்ணு யாரு தெரியுமா?

ravi

ravi

Next Post
Priya Saroj: சிக்ஸர் மன்னன் ரிங்குசிங்கிற்கு டும் டும் டும்! கல்யாண பொண்ணு யாரு தெரியுமா?

Priya Saroj: சிக்ஸர் மன்னன் ரிங்குசிங்கிற்கு டும் டும் டும்! கல்யாண பொண்ணு யாரு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023