Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

IPL 2025 CSK vs RCB: ரஜத்தின் ராஜ வியூகம்! கேப்டன்சியில் அசத்திய படிதார்! ஆர்சிபி-யின் புதிய அஸ்திவாரம்!

ravi by ravi
29 March 2025
in செய்திகள், விளையாட்டு
0
IPL 2025 CSK vs RCB: ரஜத்தின் ராஜ வியூகம்! கேப்டன்சியில் அசத்திய படிதார்! ஆர்சிபி-யின் புதிய அஸ்திவாரம்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த ஆர்சிபி – சென்னை போட்டி நேற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் 17 வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியுள்ளது. அதுவும் 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

ஆர்சிபி அதிரடி:

இந்த போட்டியில் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்சிபி அணியின் செயல்பாடு பாராட்டும் வகையில் இருந்தது. டாஸில் தோற்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தபோது, பில் சால்ட் – விராட் கோலி இருவருக்கும் பந்து சரியாக சிக்கவில்லை. இருப்பினும், சால்ட் அதிரடி காட்டினார். கேப்டன் படிதார் தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். படிக்கல் அதிரடி, டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸரால் ஆர்சிபி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

கேப்டன்சியில் கலக்கிய படிதார்:

சேப்பாக்கம் போன்ற மைதானத்தில் 197 ரன்கள் இலக்கு என்பது மிகப்பெரியது ஆகும். சொந்த மண், நீண்ட அனுபவம் வாய்ந்த பேட்டிங் படையை எப்படி ஆர்சிபி சமாளிக்கப் போகிறது? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஆர்சிபி விருந்தளித்து என்றே கூறலாம். நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு பேட்டிங், பந்துவீச்சு எப்படி பாராட்டும் வகையில் இருந்ததோ, அதேபோல ரஜத் படிதாரின் கேப்டன்சியும் பாராட்டும் வகையில் இருந்தது என்றே கூற வேண்டும்.

பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம்:

ஏனென்றால் பந்துவீச்சாளர்களை அவர் பயன்படுத்திய விதம் மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது. புவனேஷ்வர், ஹேசில்வுட்டை பயன்படுத்தி பவர்ப்ளேவில் அழுத்தம் தந்தது, குருணல் பாண்ட்யா பிரதான பந்துவீச்சாளராக இருந்தாலும் சேப்பாக்கம் மைதானத்தில் அவரது பந்துவீச்சு விளாசப்படும் என்பதை கணித்து அவருக்கு ஆட்டம் ஆர்சிபி கைக்குள் வரும் வரை பவுலிங் தராதது, லிவிங்ஸ்டன், சுயாஷ் சர்மாவை சரியாக பயன்படுத்தியது, யஷ் தயாளை தக்க நேரத்தில் வீச வைத்தது என அழுத்தத்தை சென்னை பக்கம் திருப்பினார்.

இதன் காரணமாகவே, நேற்றைய போட்டியில் சென்னை அணி தனது முதல் சிக்ஸரை 10வது ஓவரில் அடித்தது. கவுதம் கம்பீருக்கு பிறகு தோனிக்கு இப்படி ஒரு ஃபீல்ட் செட் செய்தது படிதாரே ஆகும். மேலும், டாஸ் தோற்றாலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதையே முழு நோக்கமாக கொண்டு ரஜத் படிதார் ஆடுவது நேற்றைய போட்டியில் கண்கூடாக தெரிந்தது. வெற்றிக்காக ஒவ்வொரு பந்தையும் விளாசுவதுடன், அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்களை அவர் பயன்படுத்தும் விதமும் பாராட்டும் வகையில் இருந்தது.

தோனிக்கு உகந்த மரியாதை:

மேலும், போட்டி முடிந்த பிறகு தோனிக்கு கைகொடுக்கும்போது ஒரு ஜாம்பவான் வீரருக்கு உரிய மரியாதையை அளிக்கும் விதமாக தனது தொப்பியை கழட்டி பின்னரே தோனிக்கு கைகொடுத்தார். தன்னைவிட அனுபவம் வாய்ந்த திறமை வாய்ந்த வீரருக்கு தொப்பியை கழட்டி கை கொடுப்பதே கிரிக்கெட்டின் சிறந்த பண்பாக இன்று வரை கருதப்படுகிறது. அதையும் ரஜத் படிதார் திறம்பட நேற்று செய்தார்.

விராட் கோலி, புவனேஷ்வர், ஹேசில்வுட், லிவிங்ஸ்டன், பில் சால்ட் போன்ற அனுபவம் வாய்ந்த திறமையான வீரர்களை திறம்பட ரஜத் படிதார் வழிநடத்துகிறார். இதனால்தான் கொல்கத்தா, சென்னை ஆகிய இரு அணிகளையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.

Tags: CSK vs RCBipl 2025rajat paditharRCB vs CSKvirat kohli
Previous Post

IPL RCB vs KKR: இன்று தொடங்கும் ஐபிஎல் திருவிழா! கேகேஆர் – ஆர்சிபி பலம் என்னென்ன?

Next Post

Good Bad Ugly Trailer: சம்பவம் இருக்கு.. மிரட்டிவிட்ட குட் பேட் அக்லி ட்ரெயிலர்! மரண வெயிட்டிங்கில் அஜித் ரசிகர்கள்

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023