Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

CSK: தொடரை விட்டு வெளியேறிய சிஎஸ்கே! பலவீனமாக மாறிய பலம் – காரணங்கள் இதுதான்

ravi by ravi
1 May 2025
in செய்திகள், விளையாட்டு
0
CSK: தொடரை விட்டு வெளியேறிய சிஎஸ்கே! பலவீனமாக மாறிய பலம் – காரணங்கள் இதுதான்
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் முதன்மையான அணியாக கருதப்பட்ட 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியுள்ளது.

தொடரை விட்டு வெளியேறிய சிஎஸ்கே:

இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 8 போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது. எஞ்சியுள்ள 6 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ப்ளே ஆஃப் வாய்ப்பு சிஎஸ்கே-விற்கு சாத்தியமற்றது. இந்த நிலையில், இந்த தொடரில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணங்கள் என்ன என்பதை கீழே காணலாம்.

கைகொடுக்காத அனுபவம்:

பொதுவாக ஐபிஎல் தொடரைப் பொறுத்தமட்டில் மற்ற அணிகள் எல்லாம் அனுபவத்திற்கு நிகரான இளமையான வீரர்களை கொண்டே களமிறங்கும். ஆனால், 2 ஆண்டு தடைக்குப் பிறகு வந்த சென்னை அணி அனுபவ வீரர்களை கொண்டே களமிறங்கி ஆடி வருகிறது. தோனி, டுப்ளிசிஸ், வாட்சன், ப்ராவோ, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா என கடந்த சில ஆண்டுகளில் சென்னை அணியின் வெற்றிக்காக போராடியவர்கள் 30 வயதை கடந்த வீரர்களாகவே இருந்தனர்.

இதே ஃபார்முலாவையே இந்த முறை சென்னை அணி பின்பற்றியது. தோனி, ஜடேஜா அனுபவ வீரர்களுடன் ஏலத்தில் அஸ்வின், கான்வே, ராகுல் திரிபாதி, நாதன் எல்லீஸ், விஜய் சங்கர், தீபக் ஹுடா என 30 வயதை கடந்த வீரர்களை அதிகளவில் ஏலத்தில் எடுத்தனர். உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் ஆடிய அவர்களின் அனுபவம் அணிக்கு கைகொடுக்கும் என்று கருதினர்.

ஆனால், ஏராளமான இளைஞர்கள் பட்டாளத்துடன் களமிறங்கிய மற்ற அணிகளின் முன்பு அந்த வியூகம் கைகொடுக்காமல் போய்விட்டது என்றே கூறலாம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின், விஜய் சங்கர், தீபக் ஹுடா, ராகுல் திரிபாதி, கான்வே ஜொலிக்காமல் போனது சிஎஸ்கே-விற்கு பெரும் பின்னடைவாக மாறியது.

ருதுராஜ் காயம், சொதப்பிய பேட்டிங்:

மேலும், அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரின் பாதியில் இருந்தே தொடரை விட்டு வெளியேறியது சிஎஸ்கே-வின் பலத்தை குறைத்தது என்றே கூறலாம். சிஎஸ்கே-வின் ஹிட்டராக கருதப்பட்ட ஷிவம் துபே தனது திறமையை காட்டாததும் சிஎஸ்கே-வின் வெற்றியை பாதித்தது.

அவர் உள்ளூர் பந்துவீச்சாளர்கள் மீது காட்டும் ஆதிக்கத்தை சர்வதேச பந்துவீச்சாளர்கள் மீது காட்டவில்லை என்பது அவர் எந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிகளவு ரன்களை எடுத்தார் என்பதை உற்றுநோக்கினால் புலப்படும். மேலும், அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் தோனி களமிறங்கவில்லை என்பதும் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இளைஞர்கள் ஆதிக்கம்:

சிஎஸ்கே-வைப் பொறுத்தவரை மிக எளிதில் ப்ளேயிங் லெவனை மாற்றவே மாட்டார்கள். ரவீந்திரா, கான்வே ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு பின்னர் அவர்கள் மாற்றப்பட்டதும் அணியின் ஸ்திரத்தன்மையை பாதித்தது. இந்த தொடரில் சிஎஸ்கே-விற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது கலீல் அகமது, நூர் அகமது பந்துவீச்சே ஆகும்.

மேலும், கடந்த சில போட்டிகளாக அணிக்குள் வந்து சிறப்பாக ஆடி வரும் இளைஞர்களான ஷைக் ரஷீத், ஆயுஷ் மேரா ஆகிய இருவரும் அடுத்தடுத்த சீசன்களில் சென்னைக்கு பலமாக மாறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அனுபவ வீரர்களின் அனுபவம் பெரியளவில் கைகொடுக்காத நிலையில் இளைஞர்கள் பட்டாளத்தை அணிக்குள் கொண்டு வர வேண்டிய அவசியத்தை சிஎஸ்கே உணரத்தொடங்கியுள்ளது. அடுத்த போட்டிகளில் அதன் தாக்கத்தை காணாவிட்டாலும் அடுத்த சீசனிலே அதை காணலாம் என்று கருதப்படுகிறது.

Tags: CSKiplipl 2025
Previous Post

காவேரி கூக்குரலின் “ஒரு கிராமம் ஒரு அரசமரம்” திட்டம் கோலாகல தொடக்கம்

Next Post

Isha: தமிழ் கற்றுத்தரும் ஈஷா; ஆர்வமுடன் கற்கும் வெளிநாட்டு மக்கள்

ravi

ravi

Next Post
Isha: தமிழ் கற்றுத்தரும் ஈஷா; ஆர்வமுடன் கற்கும் வெளிநாட்டு மக்கள்

Isha: தமிழ் கற்றுத்தரும் ஈஷா; ஆர்வமுடன் கற்கும் வெளிநாட்டு மக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023