நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகும் கடைசி அணி யார்? என்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் சென்னை – பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன.
சென்னை – பெங்களூர்:
இறுதிப்போட்டி போல மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில் வெற்றி பெற்றாலே சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும். பெங்களூர் அணி இந்த போட்டியில் குறிப்பிட்ட ரன் வித்தியாசத்தில் அல்லது குறிப்பிட்ட ஓவர்களுக்குள் இலக்கை எட்டினால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால், இந்த போட்டி சென்னை அணியை காட்டிலும் பெங்களூர் அணிக்கு மிக முக்கியமானது ஆகும்.
இந்த தொடரில் தொடக்கம் முதலே வெற்றி, தோல்வி என்று கலவையான ஆட்டத்தை சென்னை அணி வெளிப்படுத்தி வருகிறது. ஆனால், பெங்களூர் அணி தொடக்கத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்தது. அனைவராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த தொடரில் அசுர பலத்துடன் உலா வந்த சன்ரைசர்ஸ் அணியை சுருட்டி வீசி தனது கம்பேக்கை கொடுத்தது. அதன்பின்பு தொடர் வெற்றியுடன் ஆடி வரும் பெங்களூர் அணி இன்று தனது சொந்த மண்ணில் முக்கியமான ஆட்டத்தில் சென்னையை சந்திக்கிறது.
ப்ளே ஆப் செல்லப்போவது யார்?
மேலும், பெங்களூரில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், இன்றைய போட்டி நடைபெறுமா? அல்லது மழையால் கைவிடப்படுமா? என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஒரு வேளை மழையால் போட்டி கைவிடப்பட்டால் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும்.
நடப்பு சாம்பியனும், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக சென்னை இருந்தாலும் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத சென்னை அணி இதுவரை அனைத்து சீசன்களிலும் அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்துள்ளது. தனது முதல் கோப்பையை முத்தமிட ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல பெங்களூர் அணி இன்று முழு மூச்சுடன் போராடும் என்பது மட்டும் உறுதி.













