Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home விளையாட்டு

IND vs SA: டி20 தொடரை வெல்லுமா தெ.ஆப்பிரிக்கா? சமன் செய்யுமா இந்தியா?

ravi by ravi
14 December 2023
in விளையாட்டு
0
IND vs SA: டி20 தொடரை வெல்லுமா தெ.ஆப்பிரிக்கா? சமன் செய்யுமா இந்தியா?
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு பிறகு இந்திய அணி அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை கட்டமைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான முன்னெடுப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கியது.

தென்னாப்பிரிக்கா தொடர்:

அந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. தற்போது, இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. முதல் டி20 போட்டி மழையால் ரத்தான நிலையில், 2வது டி20யில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. ஜோகன்ஸ்பர்க்கில் நடக்கும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். இரு அணிகளை பொறுத்தவரையிலும் பேட்டிங் பலமாக உள்ளது. ஆனால், இரு அணிகளிலும் பந்துவீச்சு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்றே கூற வேண்டும்.

பலம், பலவீனம்:

குறிப்பாக, இந்திய அணியின் பந்துவீச்சு சொதப்பலாகவே உள்ளது. சிராஜ், ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் இருந்தும் தென்னாப்பிரிக்க அணி கடந்த போட்டியில் 14 ஓவரிலே இலக்கை எட்டியது. அர்ஷ்தீப்சிங் ரன்களை வாரி வழங்கும் இயந்திரமாக உள்ளார். முகேஷ்குமார் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக வீசினார். கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கினார். இதனால், இந்திய அணி இந்த போட்டியில் பந்துவீச்சை சரி செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும்.

தென்னாப்பிரிக்க அணியில் ஜான்சென், வில்லியம்ஸ், கோட்ஸி ரன்களை வாரி வழங்குகின்றனர், ஆனால், ஷம்சி, கேப்டன் மார்க்ரம் கட்டுக்கோப்பாக பந்துவீசுகின்றனர். இது அவர்களுக்கு பலமாக அமைந்துள்ளது. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தென்னாப்பிரிக்க அணிக்கு ஹென்ட்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், மில்லர், கிளாசென், பெரிய பலமாக உள்ளனர். அவர்களை விரைவில் அவுட்டாக்க வேண்டியது இந்தியாவிற்கு அவசியம் ஆகும். ஜான்செனும் அதிரடியாக ஆடக்கூடிய ஆல்ரவுண்டர் ஆவார்.

பேட்டிங் முக்கியம்:

இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் டக் அவுட்டாகிய சுப்மன்கில் – ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். திலக் வர்மா நீண்ட நேரம் களத்தில் நிற்க வேண்டும். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அசத்தலாக ஆடி வருகிறார். அவரது பேட்டிங் அதிரடி இன்றும் தொடர வேண்டும். இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக உருவெடுத்திருப்பவர் ரிங்கு சிங் ஆவார்.

ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய ரிங்குசிங், கடந்த போட்டியிலும் 39 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 68 ரன்கள் எடுத்தார். அவர் இன்றைய போட்டியிலும் தனது பங்களிப்பை அளித்தால் இந்திய அணி மிகப்பெரிய இலக்கையும் எட்டும், மிகப்பெரிய ஸ்கோரையும் நிர்ணயிக்கும் என்பது உறுதி ஆகும். இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

Tags: IND vs SAIND vs SA 3rd T20indiaSA vs INDSouth africa
Previous Post

Thalapathy Vijay: சென்னையில் நாளை மறுநாள் மருத்துவ முகாம் – விஜய் மக்கள் இயக்கம் சிறப்பு ஏற்பாடு

Next Post

Vaikunda Ekadasi: வைகுண்ட ஏகாதசி எப்போது? கொண்டாடப்படுவது ஏன்? இதோ!

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023