Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

KL Rahul: சரிந்த இந்தியா! கேப்டன் இன்னிங்ஸ் ஆடி காப்பாற்றிய கே.எல்.ராகுல்!

ravi by ravi
27 December 2023
in செய்திகள், விளையாட்டு
0
KL Rahul: சரிந்த இந்தியா! கேப்டன் இன்னிங்ஸ் ஆடி காப்பாற்றிய கே.எல்.ராகுல்!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகின் சவாலான டெஸ்ட் அணிகளில் ஒன்றான தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய அணி நேற்று அவர்களது சொந்த மைதானமான செஞ்சுரியனில் முதல் டெஸ்ட் போட்டியை தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க முதலில் பந்துவீச்சைத் தொடங்கியது.

சரிந்த இந்தியா:

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்கிய இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் சரிந்தது. உலகக்கோப்பைக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பிய கேப்டன் ரோகித்சர்மா 14 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் 17 ரன்களிலும், சுப்மன்கில் 2 ரன்னிலும் அவுட்டானார்கள். 24 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்காக விராட் கோலி – ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக அணியை மீட்ட ஸ்ரேயஸ் 31 ரன்களில் அவுட்டாக, அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் விராட் கோலி 64 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அணி மீண்டும் சரிவை நோக்கிச் சென்றபோது களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினார்.

மறுமுனையில் அஸ்வின் வந்த வேகத்தில் அவுட்டாக, ஷர்துல் தாக்கூரை மறுமுனையில் வைத்துக்கொண்டு அணியின் ஸ்கோரை ஏற்றினார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்த ஷர்துல் தாக்கூர் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார். கே.எல்.ராகுல் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். இதனால், 121 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 200 ரன்களை கடந்தது.

தாங்கிப்பிடித்த கே.எல்.ராகுல்:

சிறப்பாக ஆடிய ஷர்துல் தாக்கூர் 24 ரன்களுக்கு அவுட்டாக, கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காமல் 105 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 70 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி 59 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களுடன் ஆடியபோது மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் ஏமாற்றம் தர, மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுலால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. இதே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க மண்ணில் கேப்டனாக கே.எல்.ராகுல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: india vs south africaINDvsSAkl rahulKL Rahul Batting
Previous Post

Isha: உலக ஆயுர்வேத விழா! பரிசுகளை அள்ளிய ஈஷா சம்ஸ்கிருத மாணவர்கள்!

Next Post

SK About AJITH: “அஜித்துடன் பைக் ரைடு போக ஆசை” மனம் திறந்த சிவகார்த்திகேயன்

ravi

SK About AJITH: "அஜித்துடன் பைக் ரைடு போக ஆசை" மனம் திறந்த சிவகார்த்திகேயன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023