Saturday, April 11, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

IND vs NZ Semi Final: இறுதிப்போட்டிக்கு செல்வது இந்தியாவா? நியூசிலாந்தா? புள்ளி விவரங்கள் சொல்வது இதுதான்! – விரிவான அலசல்

ravi by ravi
14 November 2023
in செய்திகள், விளையாட்டு
0
IND vs NZ Semi Final: இறுதிப்போட்டிக்கு செல்வது இந்தியாவா? நியூசிலாந்தா? புள்ளி விவரங்கள் சொல்வது இதுதான்! – விரிவான அலசல்
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போவது யார்? தொடரை விட்டு வெளியேறப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் முதல் அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் நாளை நடக்கிறது.
இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு 2வது முறையாக ஒருநாள் உலகக்கோப்பையை முத்தமிட்ட மைதானம் என்பதால், இந்திய ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான மைதானம் வான்கடே மைதானம் ஆகும்.

கடந்த உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்ததற்கு பழி தீர்க்குமா இந்தியா? என்ற பெருத்த ஆவலுடன் இந்திய ரசிகர்கள் உள்ளனர். போட்டி நடைபெறும் வான்கடே மைதானமானது பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமான மைதானம் என்றே சொல்லலாம்.

வான்கடேவில் இரு அணிகளும்:
• வான்கடே மைதானத்தில் இந்திய அணி இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளது.
• அதில் 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
• முதலில் பேட் செய்தபோது 5 முறையும், சேசிங்கின்போது 7 முறையும் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது.
• இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இந்த மைதானத்தில் 357 ரன்கள் ஆகும். குறைந்த பட்ச ஸ்கோர் 165 ஆகும்
• நியூசிலாந்து அணி இந்த மைதானத்தில் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளது.
• 2 போட்டிகளில் வெற்றியும், 1போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.
• அதிகபட்சமாக 358 ரன்களை நியூசிலாந்து எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக 158 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா – நியூசிலாந்து இதுவரை:

• இந்தியா – நியூசிலாந்து அணிகள் இதுவரை 117 முறை ஒருநாள் போட்டியில் ஆடியுள்ளது.
• இதில் இந்தியா 59 முறையும், நியூசிலாந்து 50 முறையும் நேருக்கு நேர் வெற்றி பெற்றுள்ளது.
• இதில் இந்திய அணி 24 முறை முதலில் பேட் செய்தும், 35 முறை சேஸ் செய்தும் வெற்றி பெற்றுள்ளது.
• நியூசிலாந்து அணி 22 முறை முதலில் பேட் செய்தும், 28 முறை சேஸ் செய்தும் வெற்றி பெற்றுள்ளது.
• இந்திய அணி அதிகபட்சமாக 392 ரன்களும், நியூசிலாந்து அதிகபட்சமாக 349 ரன்களும் எடுத்துள்ளன.
• இந்திய அணி குறைந்தபட்சமாக 88 ரன்களுக்கும், நியூசிலாந்து குறைந்தபட்சமாக 79 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகியுள்ளது.
• இந்திய அணியில் அதிகபட்சமாக டெண்டுல்கர் 1750 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டெய்லர் 1385 ரன்கள் எடுத்துள்ளார்.
• தற்போதைய அணியில் விராட் கோலி 1528 ரன்களும், நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன் 1078 ரன்களும் எடுத்துள்ளனர்.
• தனி நபர் அதிகபட்சமாக சுப்மன்கில் 208 ரன்களும், டாம் லாதம் 145 ரன்களும் எடுத்துள்ளனர்.
• மொத்தமாக ஜவஹல் ஸ்ரீநாத் 51 விக்கெட்டுகளும், டிம் சவுதி 35 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.
• தற்போது ஆடும் வீரர்களில் ஷமி 30 விக்கெட்டுகள் நியூசிலாந்துக்கு எதிராக எடுத்துள்ளார். சவுதி 35 விக்கெட்டுகள் இந்தியாவிற்கு எதிராக வீழ்த்தியுள்ளார்.
• தனி நபர் அதிகபட்சமாக அமித் மிஸ்ரா 5 விக்கெட்டுகளையும், ஷேன் பாண்ட் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

உலகக்கோப்பையில் இதுவரை:

நடப்பு உலகக்கோப்பையில் லீக் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை ஏற்கனவே வீழ்த்தியிருந்தது. இது இந்திய அணிக்கு தன்னம்பிக்கையை அளிக்கும்.
• இரு அணிகளும் இதுவரை உலகக்கோப்பையில் 9 முறை ஆடியுள்ளன. இதில் இந்தியா 4 முறையும், நியூசிலாந்து 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
• இந்தியா முதலில் பேட் செய்து 1 முறையும், சேஸ் செய்து 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
• நியூசிலாந்து முதலில் பேட் செய்து 1 முறையும், சேஸ் செய்து 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
• இந்தியா அதிகபட்சமாக 274 ரன்களும், நியூசிலாந்து அதிகபட்சமாக 273 ரன்களும் எடுத்துள்ளனர்.
• குறைந்தபட்சமாக இந்தியா 182 ரன்களும், நியூசிலாந்து 146 ரன்களும் எடுத்துள்ளனர்.

Tags: IND vs NZ Semi FinalIndia VS New ZealandINDvsNZNZvsINDodi world cupODI World Cup 2023Semi Final
Previous Post

ஓவரா பீர் குடிக்குறீங்களா? கலாபவன் மணி எப்படி இறந்தாரு தெரியுமா?

Next Post

பயிர்கள் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்

ravi

ravi

Next Post
அநீதி.. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள் பிற்போக்குத்தனம் – கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்

பயிர்கள் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் - பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023