Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

டிசம்பரில் தத்தளிக்கும் தமிழ்நாடு! தண்ணீரில் மிதக்கும் நெல்லை! மக்கள் அவதி

ravi by ravi
19 December 2023
in செய்திகள்
0
டிசம்பரில் தத்தளிக்கும் தமிழ்நாடு! தண்ணீரில் மிதக்கும் நெல்லை! மக்கள் அவதி
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஒவ்வொரு ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரியை அனைவரும் உற்சாகமாக தொடங்கினாலும், கடைசி மாதமான டிசம்பரில் பலருக்கும் வருத்தங்களும், வேதனைகளும் இருப்பது இயல்பு. ஆனால், தமிழ்நாட்டிற்கும் டிசம்பர் மாதத்திற்கும் பல ஆண்டுகளாகவே ஏழாம் பொருத்தம் என்றுதான் சொல்ல வேண்டும்.

டிசம்பர்:

வழக்கமாக, கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் மாதம் என்றாலே சென்னையை புரட்டிப்போடும் அளவிற்கு ஏதாவது இயற்கை பேரிடர் ஒன்று அமைந்துவிடும். ஆனால், இந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டையே தத்தளிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

மிக்ஜாம் புயல் காரணமாக இந்த மாத தொடக்கத்தில் தலைநகர் சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையே மக்களை வாட்டி வதைத்தது. அந்த துயரத்தில் இருந்த சென்னைவாசிகள் பலரும் இன்னமும் மீளாத நிலையில், திடீரென்று திருநெல்வேலியில் வரலாறு காணாத மழை பெய்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

தத்தளிக்கும் திருநெல்வேலி:

தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டதும், 30 மணி நேரம் இடைவிடாது நெல்லையில் மழை பெய்ததும் சுமார் 1992ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதன்முறை ஆகும். 1992ம் ஆண்டு இதுபோன்று நிகழ்ந்த சம்பவத்தாலும், அப்போது தண்ணீரை திறந்துவிட்டதாலும் ஒரு கிராம மக்களே தூக்கத்திலே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அரங்கேறிய சோகமும் உண்டு.

இந்த நிலையில், தற்போது நெல்லையில் பெய்த மழை காரணமாக மக்கள் உயிரிழப்பு ஏதும் இதுவரை இல்லை என்றாலும், சேதம் என்பது மிகவும் மோசமாக உள்ளது. திருநெல்வேலி மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டமும் மிக மோசமான நிலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் வௌ்ளமென பெருக்கெடுத்து ஓடியதும், ரயில்கள், பேருந்துகள் என போக்குவரத்து சேவை நேற்று மொத்தமாக நெல்லை, கன்னியாகுமரி. தூத்துக்குடி செல்லாமல் முடங்கியதும் பல ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதன்முறை ஆகும்.

முடங்கிய மக்கள்:

சென்னையுடன் ஒப்பிடும்போது நெல்லையில் ஆறுகள், குளங்கள் ஆக்கிரமிப்பு என்பதும், தூர்வாராமல் இருக்கிறது என்பதும் மிக மிக குறைவே ஆகும். அப்படியிருக்கையில் ஒரே நாளில் இப்படி ஒரு பேய் மழை பெய்தது என்பது மோசமான நிகழ்வே ஆகும். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மட்டும் 95 செ.மீட்டர் மழை பெய்தது. இது முன் எப்போதும் இல்லாத ஒரு நிகழ்வாகும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மிகவும் மோசமான நிலைக்கு ஆளான நிலையில், அண்டை மாவட்டங்களான விருதுநகர், மதுரை, கன்னியாகுமரியிலும் மழை வெளுத்து வாங்கியது. காய்ந்த பூமி எனப்படும் ராமநாதபுரத்திலே பல இடங்களில் தண்ணீர் வெள்ளம்போல ஓடியது. எந்த புயலும் இல்லாமல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே இந்தளவு மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இந்தாண்டு டிசம்பர் தமிழ்நாட்டையே தத்தளிக்க வைத்த மாதமாக மாற்றியுள்ளது.

Tags: decembernellainellai raintamilnaduthoothukudi
Previous Post

ISHA: மண் காப்போம் இயக்கம் சார்பில் 3 மாத இயற்கை விவசாய களப் பயிற்சி

Next Post

தி.மு.க. அரசுக்கு விழும் அடி மேல் அடி! என்ன செய்யப் போகிறார் மு.க.ஸ்டாலின்?

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023