Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Isha: தமிழ் கற்றுத்தரும் ஈஷா; ஆர்வமுடன் கற்கும் வெளிநாட்டு மக்கள்

ravi by ravi
4 May 2025
in செய்திகள்
0
Isha: தமிழ் கற்றுத்தரும் ஈஷா; ஆர்வமுடன் கற்கும் வெளிநாட்டு மக்கள்
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கோவை ஈஷா யோக மையத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்து தன்னார்வத்தொண்டு புரியும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு தமிழ் மொழியை கற்றுத் தரும் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் தமிழ் மொழியை கற்று வருகின்றனர்.

ஈஷா யோகா மையம்:

ஈஷா யோக மையத்திற்கு, யோகப் பயிற்சிகளை கற்றுக் கொள்ளவும், தியானலிங்கம், லிங்க பைரவி மற்றும் ஆதியோகியின் தரிசனம் பெறவும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

தமிழ் வகுப்புகள்:

அதே போன்று பல்வேறு கலாச்சார பின்னணிகளை கொண்ட மக்கள் ஈஷா யோக மையத்திற்கு வந்து தங்கி இருந்து ஈஷாவின் பல்வேறு ஆன்மீக மற்றும் சமூக நலப் பணிகளில் தங்களை முழு நேரமாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அவ்வாறு ஈஷாவில் தங்கியிருக்கும் தமிழ் அல்லாத பிற மொழிகளை தாய் மொழியாக கொண்டிருக்கும் மக்களுக்கு ஈஷாவில் தமிழ் மொழியை கற்றுத்தரும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து ஈஷாவில் தமிழ் மொழி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடந்தும் அருண் கூறுகையில், “ஈஷாவில் பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் தன்னார்வலர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு தமிழ் மொழியில் எழுத, படிக்க, பேச, பாட மற்றும் உரையாடல்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்த பயிற்சி வகுப்புகள் முதல் நிலையில் 12 நாட்கள் தொடர் பயிற்சி வகுப்புகளாகவும், அடுத்த நிலையில் வாரத்திற்கு ஒரு நாள் வகுப்பு என 10 முதல் 12 வாரங்கள் நடைபெரும் வகையில் நடத்தப்படுகிறது.

எழுத்து, பேச்சு, பாட்டு பயிற்சி:

முதல் நிலை பயிற்சியில் ஒவ்வொரு நாள் வகுப்புகளும் மூன்று பகுதிகளாக பிரித்து நடத்தப்படுகிறது. ஒரு நாளில் இரண்டு மணி நேரம் நடைபெறும் வகுப்பில் முதல் பகுதியில் உயிர் எழுத்துக்கள் துவங்கி வார்த்தைகளை எழுதுவது வரை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது.

இரண்டாம் பகுதியில் தமிழ் வார்த்தைகளை படிக்க பயிற்சி அளிக்கப்படுகின்றது, இதில் குறிப்பாக தமிழ் சினிமா மற்றும் பக்தி பாடல்களை ஒரு கருவியாக பயன்படுத்துகிறோம். உதாரணமாக சின்ன சின்ன ஆசை, பச்சை கிளிகள் தோளோடு இது போன்ற பாடல் வரிகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு மற்றும் அதன் அர்த்தத்துடன் கற்றுத் தருகிறோம். இதில் அந்த பாடல் வரிகளின் உச்சரிப்பையும் ஆடியோவாக ரெக்கார்டு செய்து அவர்களுக்கு தருகிறோம். இசையுடன் பாடல்கள் மூலம் கற்றுத் தரும் போது அவர்களுக்கு தமிழ் மொழியை கற்பது சற்று எளிமையாக இருக்கிறது.

கதைகள்:

அடுத்து மூன்றாம் பகுதியில் தமிழ் பண்பாட்டின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் கதைகள் மூலமாக குறிப்பாக கோவில்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பக்தி உள்ளிட்டவைகள் தொடர்பான கதைகள் மூலம் தமிழ் மொழியுடன் பண்பாட்டையும் கற்றுத் தருகிறோம். உதாரணமாக திருவள்ளுவர், கண்ணகி, மனுநீதிச்சோழன் இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒரு தனிக்கதைகளை சொல்லும் போதே இவர்களுக்கு எல்லாம் தமிழ் பண்பாட்டில் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றும் கூறுகிறோம்.

மேலும் இதனுடன் தமிழர்களின் விழாக்கள், உணவு முறைகள் என பல்வேறு அம்சங்களையும் இணைத்து கற்றுத்தர முடிகிறது. தமிழ் மொழியை கற்றுத் தருவதில் இந்தக் கதைகள் முக்கியமான அம்சமாக இருக்கிறது. பலரும் கதைகளை விரும்பி கேட்பதை கவனிக்க முடிகிறது.

இதனுடன் அவர்கள் தன்னார்வத் தொண்டு புரியும் துறைகளில் அன்றாடும் தேவைப்படும் உரையாடல்கள் மற்றும் திரைப்படத்தின் வசனங்களை கொண்டும் அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதுவரை 5 வகுப்புகள் முடிவடைந்துள்ளன, இதில் சமீபத்தில் முடிவடைந்த பயிற்சி வகுப்பில் 75 பேர் கலந்து கொண்டனர், குறிப்பாக ரஷ்யா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், மேற்குவங்கம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டு தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டனர் என அவர் கூறினார்.

வெளிநாட்டு மாணவிகள்:

தமிழ் மொழி பயிற்சி வகுப்பில் பங்கேற்ற தைவான் நாட்டை சேர்ந்த ஜெனி கூறுகையில், “ இந்த தமிழ் பயிற்சி வகுப்பில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு நீண்ட நாட்களாகவே தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த வகுப்பின் மூலம் முறையாக எப்படி எழுதுவது மற்றும் படிப்பது போன்றவற்றை கற்றுக் கொண்டோம். எனக் கூறினார்.

அதே போன்று ராஜஸ்தானை சேர்ந்த நம்ரிதா கூறுகையில், “ முதலில் என்னால் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முடியாது என நினைத்து இருந்தேன். ஆனால் இங்கு தமிழ் பாடல்கள் மற்றும் கதைகள் மூலம் மொழியைக் கற்றுத் தருவது உதவியாக இருக்கிறது.” எனக் கூறினார்.

மேலும் ஈஷாவில் தமிழ் மொழி, கலைகள், பண்பாடு மற்றும் வரலாற்றை கொண்டாடும் வகையில் தமிழ்த் தெம்பு எனும் பிரம்மாண்ட திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஈஷா சமஸ்கிருதி பள்ளியில் மாணவர்களுக்கு தேவார பதிகங்களும் கற்றுத் தரப்படுகின்றன.

Tags: ishaisha yogatamil
Previous Post

CSK: தொடரை விட்டு வெளியேறிய சிஎஸ்கே! பலவீனமாக மாறிய பலம் – காரணங்கள் இதுதான்

Next Post

India Pakistan Tension: தொடரும் சண்டை! இந்தியா – பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் இருக்கு தெரியுமா?

ravi

ravi

Next Post
India Pakistan Tension: தொடரும் சண்டை! இந்தியா – பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் இருக்கு தெரியுமா?

India Pakistan Tension: தொடரும் சண்டை! இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் இருக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023