Saturday, April 11, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் வயல்வெளிகளில் தேங்கியுள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

ravi by ravi
15 November 2023
in செய்திகள்
0
கோரிக்கையை நிறைவேற்றாமல் ஆசிரியர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் சில பகுதிகளில் சாதகமான பயன்களும், பெரும்பான்மையான பகுதிகளில் பாதகமான விளைவுகளும் ஏற்பட்டிருக்கின்றன.

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்:

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் அங்கு பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்திருப்பதாக உழவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நிலைமை தலைகீழாக உள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அங்கு 17 செ.மீ மழை பெய்திருந்தது. இன்று காலை 8 மணி வரை 12 செ.மீ மழை பெய்திருக்கிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.

கூடுதல் இழப்பு ஏற்படும் ஆபத்து:

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் கூடுதலான பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களின் பிற பகுதிகளிலும் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. உடனடியாக மழைநீர் அகற்றப்படாவிட்டால், பயிர்கள் அழுகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாததால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி பெருமளவில் தோல்வியடைந்தது. அதனால், உழவர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகினர். இப்போது சம்பா மற்றும் தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் உழவர்களுக்கு கூடுதல் இழப்பு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது. சம்பா பயிரும் கைவிட்டால் உழவர்கள் மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொள்வார்கள்.

இழப்பீடு வேண்டும்:

காவிரி பாசன மாவட்டங்களில் வயல் வெளிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தொடர் மழையால், தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அதன் இரண்டாவது சுரங்கத்தில் தேங்கியுள்ள தண்ணீரை பத்துக்கும் மேற்பட்ட இராட்சத குழாய்களைக் கொண்டு வெளியேற்றி வருகிறது. அதனால், கீழ்வளையமாதேவி, உய்யகொண்டான், சேப்பளாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. என்.எல்.சி நிர்வாகத்தின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இதற்காக என்.எல்.சி நிறுவனத்திற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிப்பதுடன், உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீட்டையும் என்.எல்.சி நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags: anbumani ramadossdeltaDMKPMKTN Government
Previous Post

IND vs NZ Semi Final: இன்னும் சற்று நேரத்தில்! இறுதிப்போட்டிக்கான யுத்தத்தில் இந்தியா – நியூசிலாந்து! ரசிகர்கள் பேரார்வம்!

Next Post

Kanda Shasti: சென்னைவாசிகளே! நம்ம சென்னையில் வழிபட இத்தனை முருகன் கோயில்களா? முழு விவரம்!

ravi

ravi

Next Post
Kanda Shasti: சென்னைவாசிகளே! நம்ம சென்னையில் வழிபட இத்தனை முருகன் கோயில்களா? முழு விவரம்!

Kanda Shasti: சென்னைவாசிகளே! நம்ம சென்னையில் வழிபட இத்தனை முருகன் கோயில்களா? முழு விவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023