தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழ்பவர்களில் அஜித்குமார் தவிர்க்க முடியாத நடிகராக உள்ளார். வலிமை படம் நீண்ட இடைவெளியை எடுத்துக்கொண்ட பிறகு, தொடங்கப்பட்ட துணிவு படம் சட்டென்று படப்பிடிப்பு முடிக்கப்பட்டு கடந்த பொங்கலுக்கு வௌியானது.
விடா முயற்சி
வசூலில் சக்கை போடு போட்டு ப்ளாக்பஸ்டர் படமாக மாறிய துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு விக்னேஷ்சிவன் கூட்டணி முறிவு என பல சர்ச்சைகளுக்கு பிறகு விடாமுயற்சி உறுதி செய்யப்பட்டது. படத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு எந்த அறிவிப்பும் இதுவரை வராத நிலையில் ரசிகர்கள் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்று ஆவலுடன் உள்ளனர்.
அவ்வப்போது அஜித்குமாரின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும் பர்ஸ்ட் லுக், போஸ்டர் என எதுவுமே இதுவரை வெளியாகவில்லை. இந்த தீபாவளி தல தீபாவளியாக கொண்டாடலாம் என காத்திருந்த ஏகே ரசிகர்களுக்கு விடா முயற்சியின் எந்த அப்டேட்டும் இல்லாதது கவலையை ஏற்படுத்தி வருகிறது.
எப்போ அப்டேட்?
ஆனாலும், கடந்த பொங்கலைப் போல வரும் பொங்கலுக்கு நிச்சயம் விடா முயற்சி திரைப்படம் வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அவர்களின் நம்பிக்கையை லைகா உறுதி செய்யுமா? என்பது இனி வரும் நாட்களில்தான் தெரியும். ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த், 171-ல் ஒப்பந்தமாகியும், விஜய் வெங்கட்பிரபு படப்பிடிப்பை தொடங்கியதாகவும் தகவல்கள் வரும் சூழலில் விடா முயற்சியின் ஒற்றை அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.














