தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக உலா வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் மாபெரும் வசூலை குவித்த ஜவான் படத்திலும் நயன்தாரா நாயகியாக நடித்து பாலிவுட்டிலும் பிரபலமானார்.
தொழிலதிபர் நயன்தாரா:
பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களே நடிப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்வார்கள். நடிகைகளில் பெரும்பாலானோர் தொழில் செய்வது குறைவாகவே இருக்கும். ஆனால், நயன்தாரா மற்ற நடிகைகளுக்கு மட்டுமின்றி பெண்களுக்குமே நல்ல முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.
அவர் நம்பர் 1 நடிகையாக உலா வந்தாலும் தொழில்துறையிலும் முதலீடு செய்து தன்னை வளர்த்துக் கொண்டு வருகிறார்.
ஏற்கனவே டீக்கடை, அழகு பொருட்களில் முதலீடு செய்து தொழில் செய்து வரும் நயன்தாரா தற்போது பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் தொழிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இதற்காக அவர் பெமி 9 என்ற பெயரில் புதிய சானிட்டரி நாப்கின் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
புது ப்ளான்:
இதை நயன்தாராவே தன்னுடயை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இது ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளம். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த முயற்சியை கொண்டாட என்னுடன் இணையுங்கள். ஒருவரையொருவர் ஆதரிப்போம். இணைந்து உயர்வோம் என்று பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் மிகப்பெரிய பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் விரைவில் நயன்தாராவை காணலாம் என்றே பலரும் கூறுகின்றனர்.
நயன்தாரா பாலிவுட்டில் ரன்வீர்சிங் ஜோடியாகவும், கமல்ஹாசனுடன் தமிழ் படத்தில் ஜோடியாகவும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தன்னுடைய அடுத்த படத்திற்கான கதை ஒன்றை தயார் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.














