தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி. ஏராளமான படங்களில் நடித்துள்ள போண்டாமணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். போண்டாமணி மறைவையடுத்து திரைப்பிரபலங்கள் தங்களது இரல்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அஜித்துக்கு உதவிய போண்டாமணி
இந்த நிலையில், அஜித் பலருக்கும் உதவி செய்தது குறித்து நாம் கேள்விபட்டிருக்கிறோம். அஜித்திற்கு போண்டாமணி செய்த உதவி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அஜித்தின் ஆரம்ப காலத்தில் போண்டாமணி அவரது திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய உதவியை செய்துள்ளார்.
அஜித் நடித்த மைனர் மாப்பிள்ளை படத்தில் முதலில் நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடித்து வந்துள்ளார்.
பின்னர், அவர் சில காரணங்களால் கதாநாயகனாக நடிக்க முடியாமல் போக, பின்னர் யாரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யலாம்? என்று படக்குழு நினைத்துக் கொண்டிருந்தபோது, அப்போது வளர்ந்து வந்த நாயகன் அஜித்குமாரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்ய போண்டாமணி படக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
பதிலுதவி செய்யலயா?
இதையடுத்தே, அஜித்தை படத்தின் நாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். 1996ம் ஆண்டு வெளியான அந்த படத்தை வி.சி. குகநாதன் இயக்கியுள்ளார். அந்த படத்தில் அஜித்துடன் ரஞ்சித்தும், வடிவேலு, ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதை போண்டாமணியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்,
ஆனால், தான் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்த சமயத்தில் அஜித்திடம் உதவி பெற்றுத்தருமாறு சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டு பல சமயங்களில் வலியுறுத்தியும், அஜித் தரப்பில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று போண்டாமணி வேதனையுடன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.














