Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Sadhguru: தமிழர்கள் 7 நிமிடம் தியானம் செய்ய வேண்டும் – சத்குரு அறிவுரை

ravi by ravi
6 August 2025
in செய்திகள்
0
Sadhguru: தமிழர்கள் 7 நிமிடம் தியானம் செய்ய வேண்டும் – சத்குரு அறிவுரை
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் மொழியின் பெருமை நம் நெஞ்சில் இருந்தால், தமிழ் கலாச்சாரத்தில் ஆன்மீகத் தொண்டாற்றிய சித்தர்கள், யோகிகள் மற்றும் நாயன்மார்களின் பெயர்களை, நம் குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்’ என்று ஈஷாவில் நடைபெற்ற ‘குருவின் மடியில்’ ஒரு நாள் தியான நிகழ்ச்சியில் சத்குரு பேசினார்.

குருவின் மடி:

கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் மக்களுக்கென்று பிரத்யேகமாக சத்குரு வழிநடத்திய குருவின் மடியில் எனும் தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட 112 இடங்களிலும், கேரளாவிலும், கர்நாடகாவில் 5 இடங்களிலும், சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் என மொத்தம் 128 இடங்களில் நேரலை நிகழ்ச்சியாக நடைபெற்றது. இதில் நேரடியாகவும், நேரலை செய்யப்பட்ட இடங்களிலும் சேர்த்து மொத்தமாக 30,000-க்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.

ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசையுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், சத்குரு வழிநடத்திய சக்திமிக்க தியான அமர்வுகள், அருளுரை ஆகியன இடம்பெற்றன. இறுதியில் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார்.

மொழி கலாச்சாரம்:

இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில், “ஒரு மொழி நீண்ட காலத்திற்கு இருக்க வேண்டும் என்றால் அதனை சுற்றியுள்ள கலாச்சார அம்சங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். தமிழ் மொழியின் பெருமை நம் நெஞ்சில் இருந்தால், தமிழ் கலாச்சாரத்தில் ஆன்மீகத் தொண்டாற்றிய சித்தர்கள், யோகிகள் மற்றும் நாயன்மார்களின் பெயர்களை தமிழ் மக்கள் தங்களின் குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்.

அதே போன்று தமிழ் மொழி எங்கள் உயிர், மூச்சு என்று சொல்வதோடு நிற்காமல் சிலம்பம் போன்ற கலைகளை தமிழ் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இது சண்டை செய்வதற்காக இல்லை, ஏதோ ஒரு அபாயம் வந்தால் அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள இது உதவும். முக்கியமாக நம் பண்பாட்டில் இருக்கும் திறமைகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஈஷா யோகா:

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களும், அவர்களுக்குள் உருவாகும் கோபம், வெறுப்பு, பொறாமை, பயம், அன்பு, ஆனந்தம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் அவர்களே பொறுப்பு என்பதை உணர வேண்டும். ‘ஈஷா யோகா’ என்ற இந்த இயக்கம் மனிதர்களை பொறுப்புணர்வு உள்ளவர்களாக உருவாக்கும் நோக்கத்திலேயே நடைபெற்று வருகிறது. அதேபோன்று வெளியில் இருக்கும் சூழல்களை சமாளிக்க முயற்சிக்கும் முன்பு ஒவ்வொரு தனி மனிதர்களும் தங்களின் உள் சூழ்நிலையை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

7 நிமிடம் தியானம்:

யோகா, தியானம் செய்வதற்கு எல்லாம் நேரமில்லை என்று மக்கள் தற்போது கூறுகிறார்கள். ஆனால் நம் நாட்டின் பிரதமரே தினமும் யோகப் பயிற்சிகளை செய்கிறார். நாம் வெறும் 7 நிமிடங்களில் செய்யக் கூடிய ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ எனும் இலவச தியான செயலியை அறிமுகப்படுத்தி உள்ளோம். தமிழ் மக்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு நாளில் 7 நிமிடங்களாவது அவர்களின் மன நலத்திற்காக செலவிட்டு இந்த தியானத்தை செய்ய வேண்டும்.” எனக் கூறினார்.

Tags: ishaisha yogasadhguru
Previous Post

IND vs ENG: இதான்டா பேட்டிங்.. இங்கிலாந்தின் ஆணவத்தை உடைத்த ஜடேஜா – வாஷிங்டன் சுந்தர்!

Next Post

Isha: ஈஷா வழிகாட்டுதலால் 5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வர்த்தகம்

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023