தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோயில் வட்டத்தில் அமைந்துள்ளது மேலநீலிதநல்லூர். இந்த பகுதியில் வசித்து வருபவர் வெற்றி விஜயன் என்ற விஜயகுமார். இவர் தெற்கு ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர். இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பணமோசடி வழக்கில் திமுக நிர்வாகி கைது:
இதையடுத்து, தொழில் ரீதியாக விஜயகுமார் அவரிடம் பணம் பெற்றுள்ளார். ஆனால், வர்த்தக ரீதியாகவும் தொடர்ச்சியாக எந்த ஒரு முன்னேற்றமும், தகவலும் தராமல் விஜயகுமார் இழுத்தடித்து வந்துள்ளார். இதையடுத்து, விஜயகுமாரிடம் அந்த பெங்களூர் தொழிலதிபர் தனது பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், அவர் அந்த பணத்தை திருப்பித் தராமல் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் மீது அந்த தொழிலதிபர் பெங்களூர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, விஜயகுமார் மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அவரை பண மோசடி வழக்கில் போலீசார் கைது செய்தனர். பணமோசடி வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இவர்மீது பணமோசடி புகார்கள் கட்சி தலைமைக்கு சென்றாதால் தான் இவரிடம் இருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.













