தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவரது நடிப்பில் கடந்த 6ம் தேதி வெளியான திரைப்படம் விடாமுயற்சி. அஜித்தின் வழக்கமான படமாக இல்லாமல் மிகவும் இயல்பான படமாக இந்த படம் இருந்தது.
குட் பேட் அக்லி:
விடாமுயற்சி படம் அஜித்குமார் நடித்துக் கொண்டிருக்கும்போதே தொடங்கப்பட்ட படம் குட் பேட் அக்லி. இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால், அஜித்குமாரின் கெட்டப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இன்று டீசர் ரிலீஸ்:
இந்த படத்தில் மிகவும் ஸ்டைலிஷாக, வித்தியாசமான கெட்டப், ஒல்லியான தோற்றம் என அஜித்தின் லுக் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இந்த படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
இந்த டீசர் இன்று மாலை 7.03 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. டீசர் ப்ரோமா வீடியோவே ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது. அஜித் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விதத்தில் இந்த படம் இருக்கும் என்று அஜித் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்பு
இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இவர் த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர். பின்னர், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை எடுத்தார். பின்னர், பகீரா படத்தை இயக்கினார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். கிரீடம் படத்திற்கு பிறகு அஜித்தின் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அஜித் நடித்துள்ள இந்த படத்தில் த்ரிஷா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அஜித்துடன் இணைந்து பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.














