Monday, February 9, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

கோமிய விவகாரம்: சென்னை ஐஐடியின் இயக்குநர் பதவிக்கு லாயக்கற்றவர் பேரா.காமகோடி – எஸ்டிபிஐ கடும் கண்டனம்

ravi by ravi
21 January 2025
in செய்திகள்
0
கோமிய விவகாரம்: சென்னை ஐஐடியின் இயக்குநர் பதவிக்கு லாயக்கற்றவர் பேரா.காமகோடி – எஸ்டிபிஐ கடும் கண்டனம்
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கோமியம்:

சென்னையில் கடந்த ஜனவரி 15 அன்று மாம்பலம் கோசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி, கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட ஒரு துறவி, கோமியம் எனப்படும் பசுவின் சிறுநீர் அருந்திய பதினைந்து நிமிடங்களில் அவரது உடல்நலம் தேறியதாகக் கூறி, பசுவின் சிறுநீரில் மருத்துவக் குணங்கள் உள்ளன, அது பாக்டீரியாக்களை அழிக்கும், பூஞ்சைகளை ஒழிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும் என்று அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறியுள்ளார். இந்த உரை, ஒன்றிய பாஜக ஆட்சியில் நாடு எத்திசையை நோக்கிச் செல்கிறது என்பதற்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும்.

ஐஐடி:

ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தவறான போலியான பரப்புரைகள் மூலம் வரலாறுகளை, வரலாற்றுப் பாடங்களை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மற்றொரு புறம் அறிவியலுக்குப் புறம்பான இதுபோன்ற கருத்துக்களைத் திணிக்கும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

லாயக்கற்றவர்:

ஐஐடி-கள் தான் இந்தியாவின் மிக உயர்ந்த தொழில்நுட்ப பொறியியல் கல்வி நிறுவனங்கள். அதிலும் சென்னை ஐ.ஐ.டி. தான் நாட்டிலேயே தலைசிறந்த நிறுவனங்களில் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது. மருத்துவ அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத கருத்துகளை உண்மை போன்று திரித்துக் கூறியுள்ள காமகோடி, ஐஐடி நிறுவனத்துக்கு தலைமை வகிக்க லாயக்கற்றவர் என்பது அவரின் உரை உறுதிப்படுத்துகிறது.

ஏற்கனவே, பசு மாட்டுச் சிறுநீர் குறித்துக் கட்டவிழ்த்து விடப்படும் கட்டுக்கதைகளுக்கு எதிராக, இந்திரப் பிரஸ்தாப பல்கலைக் கழக பயோ டெக்னாலஜி துறைப் பேராசிரியரும், சர்வதேச நைட்ரோஜன் இனிஷியேட்டிவ் அமைப்பின் தலைவருமான என்.இரகு ராம் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

14 வகையான ஆபத்தான பாக்டீரியாக்கள்:

மேலும், இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாட்டு மூத்திரத்தில் 14 வகையான ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பதால் அது நேரடியாகக் குடிப்பதற்குத் தகுந்த ஒன்றல்ல என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா தொற்று பரவலின் போது, கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தின் மூலம் தீர்வு காண முடியும் என பேரா.காமகோடி போல் சிலர் செய்திகளைப் பரப்பி வந்த நிலையில், பசு சிறுநீர் வைரஸை குணப்படுத்தும் என்ற கூற்றுகளுக்குப் பின்னால் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் முன்னாள் இயக்குநர் கிருதி பூஷண் தெரிவித்தார்.

அப்போதைய ஒன்றிய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனும், கைகளைக் கழுவுதல், உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல், அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் மருத்துவமனையை நாடுதல் என்ற எளிமையான முன்னெச்சரிக்கை விஷயங்களை மட்டுமே கடைப்பிடிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

பதவி நீக்கம் செய்ய வேண்டும்:

ஆனால், அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் மிக உயர்ந்த தரத்தில் ஊக்குவிக்க வேண்டிய தலையாய பொறுப்புள்ள நிறுவனத்தின் இயக்குநராக இருந்துகொண்டு, உயரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கேலிக்கூத்தாக்கி வருகின்றார் பேராசிரியர் காமகோடி. இவர் தலைமையில் சென்னை ஐஐடி செயல்படுமானால் அது அந்நிறுவனத்தில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களைப் பாழாக்கிவிடும். ஆகவே, பேராசிரியர் காமகோடியை உடனடியாக அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: IIT Madraskamakodinellai mubaraksdpi
Previous Post

Isha: திருவண்ணாமலை கோவிலில் தேவாரம் பாடிய சத்குரு குருகுல மாணவர்கள்!

Next Post

Maha Shivratri 2025: மகா சிவராத்திரி! திருச்சியில் ஆதியோகி ரதயாத்திரை

ravi

ravi

Next Post
Maha Shivratri 2025: மகா சிவராத்திரி! திருச்சியில் ஆதியோகி ரதயாத்திரை

Maha Shivratri 2025: மகா சிவராத்திரி! திருச்சியில் ஆதியோகி ரதயாத்திரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

Rahu Ketu: ராகு – கேது தோஷமா? கவலையே வேண்டாம்! இந்த கோயில்களுக்கு போங்க சரியாகிடும்

1
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

Isha: ஈஷா பயிற்சியால் கிராமப்புற மாணவர்கள் செஸ் போட்டியில் வெற்றி

26 November 2025
TVK Vijay: கரூரில் எட்டிக்கூட பார்க்காத தவெக.. நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதவரா விஜய்?

TVK Vijay: மக்களுக்காக விஜய்யா? விஜய்க்காக மக்களா? ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கிறாரா தளபதி?

27 October 2025
RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

RO-KO: இனிதான் ஆட்டமே.. கம்பீருக்கு சவுக்கடி தருவார்களா ரோகித், கோலி? பெர்த்தில் சம்பவம் இருக்கு!

18 October 2025
ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

ஒத்துழைப்பாலே விண்வெளி துறையில் அதிகம் சாதிக்க இயலும்.. சுனிதா வில்லியம்சனுடனான கலந்துரையாடலில் சத்குரு கருத்து

17 October 2025

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023