Sunday, April 12, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

Isha: மகாசிவராத்திரி கொண்டாட்டம்: நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை!

ravi by ravi
10 January 2025
in செய்திகள்
0
Isha: மகாசிவராத்திரி கொண்டாட்டம்: நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை!
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை திருநெல்வேலியில் ஜனவரி 16-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. அதே போல் சுசீந்திரத்தில் இருந்து கோவை ஈஷாவிற்கு 500 கி.மீ தூரம் ஆதியோகி தேருடன் பக்தர்கள் பாதயாத்திரை வர உள்ளனர்.

மகாசிவராத்திரி:

தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ஆறுமுகம் இதுதொடர்பாக பேசியதாவது, “ஈஷாவில் 31-வது மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

ஆதியோகி ரத யாத்திரை:

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டிற்கான ஆதியோகி ரத யாத்திரை கோவை ஆதியோகி முன்பு துவக்கி வைக்கப்பட்டது. இதில் கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை டிசம்பர் 11-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

அதேபோல் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை டிசம்பர் 22-ஆம் தேதி தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.

எங்கெல்லாம் பயணம்?

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கூடங்குளம், அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் வரும் 16-ஆம் தேதி முதல் இந்த ரதம் பயணிக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜன’21-ஆம் தேதி தொடங்கி தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வலம் வர இருக்கிறது. இந்த ரதங்கள் செல்லும் இடங்களில் அங்குள்ள முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பினை வழங்க உள்ளனர். ஆதியோகிக்கு விருப்பம் உள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம்.

முன்னதாக டிச-26-ஆம் தொடங்கி ஜன’15-ஆம் தேதி வரையில் கன்னியாகுமரி, மார்த்தாண்டம், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இந்த ரதம் வலம் வந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவ யாத்திரை:

இதனுடன் ‘சிவ யாத்திரை’ எனும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் இருந்து ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய 6 தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர்.

அந்த வகையில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ஆதியோகி திருவுருவச் சிலையுடன் கூடிய திருத்தேரினை நூற்றுக்கணக்கான சிவாங்கா பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து கோவை வெள்ளியங்கிரி வரை கிட்டத்தட்ட 500 கிமீ தூரம் பாத யாத்திரையாக இழுத்து வர உள்ளனர். வாகை மரத்தினால் செய்யப்பட்ட ஆதியோகி தேரின் எடை 2 டன் ஆகும். மேலும் அத்தேரில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரின் திருவுருவச் சிலைகளும் இடம் பெற்று இருக்கும். வெள்ளியங்கிரி மலையேற்றத்துடன் இந்தப் பாதயாத்திரை நிறைவுப்பெறும்.

நேரலைக்கு ஏற்பாடு:

மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா அதே நேரத்தில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. தெற்கு மண்டலத்தில் சாத்தூர், சிவகாசி, நாகர்கோவில் உள்ளிட்ட மொத்தம் 12 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை, கூடங்குளம், அம்பாசமுத்திரம் ஆகிய 3 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. திருநெல்வேலியில், திருநெல்வேலி சந்திப்பு பெருமாள் தெற்கு ரத வீதியில் அமைந்துள்ள நெல்லை சங்கீத சபாவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இவ்விடங்களிலும் பக்தர்கள் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புத்தகம் மற்றும் மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

போக்குவரத்து ஏற்பாடு:

அதுமட்டுமின்றி, கோவைக்கு வர விரும்பும் வெளி மாவட்ட மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதியோகி ரதங்கள் மஹாசிவராத்திரி வரையிலான 2 மாத காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30,000 கி.மீ பயணிக்க உள்ளன. மேலும் ரதங்கள் திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளையும் வலம் வந்த பின்னர் இறுதியாக பிப்ரவரி 26-ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளன.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது அவருடன் தன்னார்வலர்கள் பாபு மற்றும் இளங்கோ உடன் இருந்தனர்.

Tags: ishaisha adhi yogimahashivratri 2025
Previous Post

திசை திருப்ப முயன்ற தி.மு.க.! ஆட்டத்தை மீண்டும் தொடரும் அ.தி.மு.க. – அனல்பறக்கும் தமிழக அரசியல்

Next Post

Jayachandran: இவர் பாடுன பாட்டா இதெல்லாம்? கேட்டுகிட்டே இருக்கலாமா? மறைந்தாலும் வாழும் ஜெயச்சந்திரன்

ravi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023