Friday, April 10, 2026
News Face Tamil
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
No Result
View All Result
News Face Tamil
No Result
View All Result
Home செய்திகள்

இயற்கை விவசாயத்தில் ‘மண் தான் வாத்தியார்’! ஈஷாவின் 3 மாத களப் பயிற்சியில் விவசாயி வள்ளுவன் சிறப்புரை

ravi by ravi
1 April 2024
in செய்திகள்
0
இயற்கை விவசாயத்தில் ‘மண் தான் வாத்தியார்’!  ஈஷாவின் 3 மாத களப் பயிற்சியில் விவசாயி வள்ளுவன் சிறப்புரை
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மண் காப்போம் இயக்கத்தின் 3 மாத இலவச இயற்கை விவசாய களப் பயிற்சியின் நிறைவு விழா கோவையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி வள்ளுவன் ‘இயற்கை விவசாயத்தை கற்றுக்கொள்ள விரும்பும் இளைஞர்கள் மண்ணை அதிகம் கவனிக்க வேண்டும். என்னை போன்ற முன்னோடி விவசாயிகளும், வேளாண் பயிற்சியாளர்களும் கற்றுக்கொடுப்பதை விட அதிகமான விஷயங்களை மண் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும். என்னை பொறுத்தவரை இயற்கை விவசாயத்தில் ‘மண் தான் வாத்தியார்’ என கூறினார்.

மண் காப்போம் இயக்கம்:

அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் உலகளவில் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை செம்மேட்டில் உள்ள அந்த இயக்கத்தின் 35 ஏக்கர் மாதிரி இயற்கை விவசாய பண்ணையில் 3 மாத இலவச களப் பயிற்சியையும் நடத்தி வருகிறது.

இந்த 3 மாத களப் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மாடுகளை கையாள்வது, இயற்கை இடுப்பொருட்கள் தயாரிப்பது, விவசாய இயந்திரங்களை பயன்படுத்துவது, விதைகளை விதைப்பது முதல் அறுவடை செய்து விற்பனை செய்வது வரையிலான பல்வேறு அம்சங்கள் குறித்து கற்றுகொடுக்கப்படுகிறது.

பயிற்சி முகாம்:

அந்த வகையில், ஜனவரி 1-ம் தேதி தொடங்கிய 4-வது குழுவினருக்கான பயிற்சியின் நிறைவு விழா செம்மேடு பண்ணையில் இன்று நடைபெற்றது. இதில் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு மண் காப்போம் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த திரு. ஆனந்த் அவர்கள் கூறுகையில், ‘நான் ஐ.டி துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தேன். அதன் பின்னர் அதில் இருந்து விலகி சில ஆண்டுகள் சொந்தமாக விவசாயம் செய்து வந்தேன். என்னுடைய குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை விவசாயி என்பதால் விவசாயம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் நானே சொந்தமாக தேடி தேடி கற்றுக்கொள்ள வேண்டி இருந்தது.

முன் அனுபவமோ, முறையான பயிற்சியோ இல்லாததால் என்னுடைய நேரமும், பணமும் அதிகம் விரயமானது. ஒருகட்டத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் விவசாயத்தை தொடர முடியவில்லை. எனவே கொரோனா காலத்தில் என்னுடைய நிலத்தை விற்றுவிட்டேன். இருந்தாலும், இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் நீங்கவில்லை. இதன்காரணமாக, ஈஷாவின் பயிற்சியில் கலந்துகொண்டேன். நான் இங்கு தங்கியிருந்த 3 மாதங்களில் ஏராளமான புது விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

உழவில்லா விவசாயம், பல பயிர் சாகுபடி முறை போன்ற அம்சங்களை அவர்கள் இங்கு வெற்றிகரமாக செய்து வருகிறார்கள். அதில் இருந்து கிடைத்த அனுபவத்தை கொண்டு நான் புதிதாக வாங்கியுள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் காய்கறி விவசாயத்தை நான் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இந்த முறை அதில் நிச்சயம் வெற்றி பெறுவேன்” என மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார்.

இதேபோல், எம்.ஏ. எக்கானமிக்ஸ் பட்டாதிரியான வைரமுத்து கூறுகையில், “மைக்ரோ பினான்ஸ் கம்பேனி, கார் ஷோரூம் ஆகிய இடங்களில் வேலை பார்த்த எனக்கு இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் இருந்தது. அதனால், இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டேன். எனக்கு சொந்தமாக நிலம் இல்லாததாலும், பொருளாதார தேவைகள் இருப்பதாலும், வேலைவாய்ப்பை எதிர்பார்த்து தான் இந்தப் பயிற்சிக்கு வந்தேன். என்னுடைய நோக்கம் பூர்த்தி அடையும் விதமாக, பயிற்சிக்கு பிறகு ஒரு பண்ணையில் எனக்கு வேலை வாங்கி தரும் பணியையும் ஈஷா செய்து தந்துள்ளது. 3 மாதங்களுக்கு உணவும், தங்குவதற்கு இடமும் இலவசமாக வழங்கிய ஈஷா தற்போது எனக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

Tags: coimbatoreishaisha yoga centre
Previous Post

RCB vs KKR: தொடரும் மட்டமான பவுலிங்! எப்போதுதான் மாறும் ஆர்.சி.பி.?

Next Post

Isha: ஈஷா யோக மையம் வந்தடைந்தார் சத்குரு! வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு!

ravi

ravi

Next Post
Isha: ஈஷா யோக மையம் வந்தடைந்தார் சத்குரு! வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு!

Isha: ஈஷா யோக மையம் வந்தடைந்தார் சத்குரு! வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

தளபதி நீங்களே இப்படி பண்ணலாமா? குழந்தைங்க இருக்காங்க!

6 October 2023
தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி ஆன் தி வே.. லியோ ட்ரெயிலர் இன்று ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

5 October 2023
“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

“முதலமைச்சருக்கு நன்றி” விரைவில் தமிழ்நாடு டிராவல் மார்ட் மாநாடு – புதிய நிர்வாகிகள்

15 October 2023
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பம்.. ரசிகர்கள் ஆனந்தம்!

4 October 2023
எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

எப்போது கிடைக்கும் விடாமுயற்சி அப்டேட்..? ஏகே ரசிகர்கள் காத்திருப்பு..!

0
குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

குஜராத் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.. வெற்றிகரமாக செய்த ரேலா மருத்துவமனை..!

0
நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

நண்பர்களே.. தற்கொலை எண்ணம் வருதா..? ப்ளீஸ் இதை பண்ணுங்க..!

0
சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

சாம்சனுக்கு போல கருண்நாயருக்கும் குரல் ஒலித்திருந்தால்…?

0
‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

‘பசுமை தொண்டாமுத்தூர் இயக்கம்’ மரம் நடும் விழா! 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடவு

13 March 2026
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு

5 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

Isha: ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு

1 March 2026
தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

தொண்டாமுத்தூர் மக்களுக்காக ஈஷா இலவச தகன சேவை! பொதுமக்கள் பாராட்டு!

21 February 2026

Recent News

Follow Us

Browse by Category

  • About Us
  • Contact Us
  • Privacy & Policy
  • Terms & Conditions

©newsfacetamil2023

No Result
View All Result
  • செய்திகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆட்டோ/தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்

©newsfacetamil2023